பக்கம்:அலை தந்த ஆறுதல்.pdf/27

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

26

அலை தந்த ஆறுதல்

படுத்தட்டும். ஆனால் என்னை அசுத்தப்படுத்தாமல் இருக்கலாமல்லவா!’ என்றது.

மனிதர்கள் என்றதும் அலைகள் ‘மனிதர்களே! எங்கே அவர்கள் எங்களைத் துார்த்து விடுவார்களோ என்றுதானே நாங்கள் விழித்துக்கொண்டே இருக்கிறோம்’ என்றன.

"உங்கள் தலைவியின் கணவன் வந்துவிட்டானா?” என்று “யாரணங்குற்றனை கடலே" எனத் தொடங்கும் குறுத்தொகைப் பாடலைக் கருத்தில கொண்டு கேட்டேன்.

அதற்கு அலைகள் “நாங்கள் அயரமாட்டோம். சோர்ந்துபோய் "நிலத்தின் பக்கம் வரமாட்டோம். ஏன்? நாங்கள்போட்ட பிச்சைதானே அது! விரும்பினால் ஆட்கொண்டு விடுவோம். எங்கள் அச்சம் எல்லாம் மனிதனைவிட அவன் மூளைக்குத்தான்! ஆனால் அவனுக்குத் துணிவுதான் இல்லை. கடலில் ஒன்றையொன்று விழுங்கும் முதலைகள், சுறாக்கள், திமிங்கிலங்கள்,நண்டுகள் இருக்கத்தான் செய்கின்றன, ஆனால் தங்கள் பூசல்களை வீட்டோடு வைத்துக் கொள்கின்றன. வாழ்ந்தாலும் கடல் வீழ்ந்தாலும் கடல்!! உங்களைப் போல் அவை தற்கொலை செய்துக்கொள்வதில்லை. அதற்கு உரிமையும் கொடிபிடித்துக் கேட்பதில்லை” என்று பெளர்ணமி ஆதலால் சற்றுப் பேரிரைச்சலுடன் கூறின.

தேவர்களுக்கு அமுதம் அளித்த பெருமை உங்களுக்கு உண்டே! என்மனம் ஆறுதல் பெற ஒருவழி சொல்லக் கூடாதா?’ என்று பணிந்து கேட்டேன்.

அப்போது ஒர் அலை, தரையிலிருந்து மேலே துள்ளிக் குதித்து அன்னக்கூட்டத்தைப் போல் வெள்ளிய