பக்கம்:அலை தந்த ஆறுதல்.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சி.பா.

37

கொண்டது. எனக்கென்னவோ சலவை சோப் விளம்பரங்கள்தான் என் நினைவுக்கு வந்தன. இருட்டறையில் உள்ளதடா உலகம்’ என்பதைப் புரிந்துகொண்டேன். திரியழல் விளக்கு எரியும் வீட்டிற்குள் நுழைந்தேன். அது அடையா வாயிலாக இருப்பதைக்கண்டு, நான் தேடிய கொள்கைச் சான்றோர் வீடு அதுதான் என்று உணர்ந்தேன். மெல்லிய குரலில் யாரையோ கடிந்து கொண்டிருந்தார். “அலுவலகத் தொடர்பான பணி அலுவலகத்தில்தான். இவ்வாறு வீட்டிற்கெல்லாம் வந்து தொல்லைப் படுத்துவதும் தொல்லைக்குட்படுவதும் தவறு!” என்று கடுகு தாளிப்பைப் போல் பொரிந்தார். என்னை அடையாளம் கண்டு “நீ எங்கே இங்கு வந்தாய்?” என்று தந்தையுணர்வோடு கேட்டார். “பொய்ம்மையும் வாய்மையிடத்த அல்லவா? மாடுமேய்க்கும் கண்ணனைப் பார்க்க வந்தேன்; வழி தவறிவிட்டேன் என்றேன்!” “மழைக்கு ஒதுங்க வந்தாயா?’ என்று சொல்லிவிட்டு “அவன் எனக்கே வழிகாட்டி அவன் ஊதிய குழல் கேட்டுத்தான் இந்த வானம் மழையைப் பெய்திருக்கிறது.” என்று கனிவான குரலில் பேசினார். ஒப்பனை செய்து கொண்ட நடிகை செயற்கையழகுடன் திரைப்பட இயக்குநர்முன் காட்சித் தொடக்கத்திற்குத் தான் தயார் என்பதுபோல மின்சாரக்குழல் விளக்குக் கண்ணிமைக்கும் நேரத்தில் வந்தது. “அகஇருளைப் போக்கும் உங்களைப் போன்ற பெரியவர்களுக்கு முன் நான் எம்மாத்திரம்’ என்று சொல்லித் தலைகீழாக யோகாசனம் செய்யும் மனிதனைப்போல வித்தைக்காரரைப் போலத் தொங்கிக் கொண்டிருந்தது.

ஒரு நல்ல நண்பனின் எதிர்காலம், என் அணுகுமுறையால் பாழாகாமல் இருக்கக் காரணக்குறியாகிய

அலை-3