பக்கம்:அலை தந்த ஆறுதல்.pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44

அலை தந்த ஆறுதல்

அவரிடம் இருப்பதைக் கண்டேன். உலகம் பழித்ததை ஒழித்துவிட்ட இவர் அல்லவோ துறவி கொள்கையில் என்ன பிடிப்பு: இந்தக் காலத்திலும் இப்படியொரு பட்டினத்தாரா.” என்று எனக்குள்ளேயே கேட்டுக் கொண்டேன். அதோடு விட்டேனா? அதுதான் இல்லை. “உங்கள் மனைவி அந்தஸ்து உயர்ந்துவிட்டதால் இந்த வேலையை விட்டு விடும்படி வற்புறுத்தினால் என்ன செய்வீர்கள்?” என்று ஒரு கேள்வியைக் கேட்டு வைத்தேன். “மாட்டாள்...என்னை நன்றாக அறிந்தவள் அவள். என் தகுதி, திறமை, விருப்பத்துக்கு எத்த வேலை...இதில் தலையிட்டால் என் சுதந்திரம் பறிபோனதாகவே நினைப்பேன்...செய்யும் தொழில்தான் தெய்வம்!” என்று சொன்னார். என்னையும் அறியாமல் நான் நிருபர் என்பதையும் மறந்து என் கண்கள் நீரைப் பெருக்கின. பேட்டியைத் தொடர்ந்பேன். “ஒருவேளை, இந்தப் பணத்தை எந்தக் காரியங்களுக்குச் செலவு செய்யலாம் என்று உங்கள் மனைவி உங்களை யோசனை கேட்பதாக வைத்துக்கொள்ளுங்கள்...அப்போது 6Tദ്rതെr சொல் வீர்கள்’ என்றேன். “என்போன்ற தொழிலாளர்கள் குடியிருக்க சின்னச் சின்ன சிமண்ட் பூசாத காறை வீடுகள் கட்டலாம் என்பேன்... அவர்கள் உடல்நலமும் உள்ள நலமும் பாதிக்காத வகையில் பல நல்ல பெரியவர்களின் பழக்கத்தை உண்டாக்குவேன். அனாதைப் பிணங்களின் அடக்கம், ஏழைக் குழந்தைகளின் படிப்பு...இதுங்களுக் காகச் செலவு செய்யச் சொல்வேன் என்றார். ஆளிடம் செய்தி இருக்கிறது என்பதை உணர்ந்து கொண்டேன். நீங்கள் என்ன படித்திருக்கிறீர்கள் என்று கேட்டேன். .பி. ஏ. என்றார். ஹைடென்ஷ்ன் கரண்ட்டில் கை வைத்தது போல் ஆனேன்...பி.ஏ. படித்தும்...’ என்று இழுததேன். சந்தர்ப்பமும் சூழ்நிலையும் சதிகாரக்