பக்கம்:அலை தந்த ஆறுதல்.pdf/46

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சி.பா.

45

கும்பலின் சாகசமும் விதியும் என் வாழ்க்கையோடு விளையாடி என்மீது குற்றம் சுமத்தி என்னைச் சிறைப் பறவையாக்கிச் சிறகை ஒடித்துவிட்டது. ஏழாண்டுக் காலம் தனிமையில் தவித்தேன். எந்த உறவும் எட்டிப் பார்க்கவில்லை. விடுதலை பெற்றேன். வயிற்றுக் கவலை யைப் போக்க வேலை தேடித்தேடி அலைந்தேன்... உண்மையைச் சொன்னேன்...உதட்டளவில் வாய் முத்துக்களை உதிர்த்த பூச்சு உலக புண்ணியர்கள் வழிகாட்டவில்லை. சோர்ந்தா போனேன். இல்லவே இல்லை, செய்யாத தவறுக்காகச் சிறையில் அடைந்த தண்டனையின்போது காய்கறி வெட்டச் சொல்லிக் கொடுத்த புண்ணியவானின் புத்திமதி ஞாபகத்திற்கு வந்தது. இந்த முதலாளியிடம் ஒன்றையும் ஒளிக்காமல் வேலை கேட்டேன். “குறையில்லாத மனிதன் யார்?” என்று சொல்லி வேலை போட்டுக் கொடுத்தார். “உங்கள் திருமணம் என்றேன். “சிவப்பு விளக்குப் பகுதிக்காக விலை பேசப்பட்டபோது தப்பியோடிக் கிணற்றை நாசப்படுத்த முயற்சி செய்த பெண்ணையும் கிணற்றையும் உத்தே சித்துச் செப்துகொண்ட நீண்ட நாள் ஒப்பந்தம்” என்றார் சிரித்தவாறே! “உங்கள் தம்பிகளைப்பற்றி ஒரு வார்த்தை” என்று கேட்டேன். முதலாமவன் யதார்த்த வாதி வெகுஜன விரோதத்தைச் சம்பாதித்தவன். இரண்டாமவன் ஒரு புனுக்குப்பூனை. மூன்றாமவன் சரியான கோயபல்ஸ். பிழைத்துக்கொள்வான்” என்று கூறி முடித்தார். பேட்டி கொடுத்த எந்தவிதமான பாதிப்பும் இல்லாமல் அவருடைய கைகள் கத்தரிக்காயை எடுத்து இட்லி சாம்பாருக்கு நறுக்கத் தொடங்கின. வாய், “கெஞ்சகமே கோயில்; நினைவே சுகந்தம்; அன்பே மஞ்சனநீர்; பூசைகொள்ள வாராய் பராபரமே!” என்ற தாயுமானவரின் அடிகளை முணுமுணுத்தது. எல்லா