பக்கம்:அலை தந்த ஆறுதல்.pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60

அலை தந்த ஆறுதல்


செவப் ஒன்னோட பேசினதுலெ இன்னும் நேர மாயிருச்சு...எனக்கு ஒரு பாடம் போச்சுது-நான் வர்ரேன்... (ஒடுகிறான்)

காட்சி-2

(மானுார் நாட்டாமைக்காரர் வீட்டில் முதியோர் கல்வி வகுப்பு நடைபெறுகிறது கந்தன் வாத்தியார் பாடம் நடத்துகிறார்)

நேரம் இரவு 7. IO

கந்தன் : இந்தப் பூச்சியோட பேரு என்ன? சொல்லுங்

கம்மா காளி!

காளி : புகையான்...

கக் சரியா சொல்லிப்புட்டீங்களே!...

காளி : என்னங்க நாங்க எங்க வயல்ல பாத்துகிட்டே

இருக்குறோமே...

கர் : இதை பாத்து எழுதுங்க... (புகையான் என்று

எழுதிய அட்டையைக் காட்டுகிறார்)

காளி : பு...கை...யா...ன்

கர் : அம்புட்டுதாங்க...

காளி : நானு வூட்டுலேயே எளுதிப் பாத்தேங்க...மவங் கூட எளுதிக் காட்டுறான்... ஐயா...கைய வலிக்குது கொஞ்ச நேரங்களிக்க எளுதறேங்க