பக்கம்:அலை தந்த ஆறுதல்.pdf/82

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சி.பா.

81


செங் :

முத் :

சிங் :

செங் :


காட்சி-5

(முத்துக்காளையின் வீட்டில்)

ஏண்டி ஒனக்கு அம்புட்டு ஆய்ப் போச்கதா? இந்த வெடுவெட்டிப்பய மொட்டையனத்தான் கட்டிக்கு வேன்னா சொல்றே அது இந்தக் கட்டை இருக்குற வரைக்கும் நடக்காது...சொல்லேன்யா வாயில என்ன கொளுக்கட்டையா? ஒன் னோட வேற பெரிய ரோதனையாப் போச்சுது.

ஆமாம் புள்ளே சிங்காரி ஒங்கம்மா சொல்லிப் புட்டாள்ள பொறவு பேச்சென்ன? அவ சொல் றாப்ல நடந்துக்க!

என்னப்பா நீங்க சின்னப் புள்ளேலேருந்து “அவந்தான்டி ஒம்மச்சான்னு” நீங்க அம்புட்டுப் பேருந்தானெ சேந்து சொன் னிங்க...இப்பப் போயி மனசை மாத்திக்கச் சொல்றீங்க. இது நியாயமா? என்னால அம்மா சொல்லுறதைக் கேக்க முடியாது ...முடியாது.என்ன ஆனாலும் சரி!

நியாய அநியாயத்தைப் பேசற அளவுக்கு ஒனக்கு வயது பத்தாது...பெரியவங்க சொல்றதைக் கேளு; ஒன் நல்லதுக்குத்தான் சொல்றேன்...(அந்தச் இமயம் பன்னாரி வர அவரைப் பார்த்து) வாங்க தம்பி! நீங்க வயசுல சின்னவரா இருந்தாலும் வெவரத் தெரிஞ்சவரு இவளுக்குக் கொஞ்சம் புத்தி சொல்லுங்க தம்பி பெண் புத்தி, பின் புத்தின்னு தெரியாம ஒளறிக்கிட்டு இருக்குறா கருவேப்ல கொதது மாதரி ஒரே பொணனுங்க!