பக்கம்:அலை தந்த ஆறுதல்.pdf/91

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90

அலை தந்த ஆறுதல்


கம : எங்க ஊருக்கு வாங்க மாமா...நல்ல இயற்கைவிளம்!

நாங்க குடிக்கிற கூழைக் குடிங்க.

தக் சந்தோஷம் மகளே! சந்தோஷம். நான் என் ராஜா

பெண் :

பின் :

பெண் :

பின் :

வுக்குப் புதையலைத்தான் தேடிக் கொடுத் திருக்கேன்.

(இசை)

பெற்றான் பெறின்பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப் புத்தேளிர் வாழும் உலகு.

பெண்கள் தாம் எ ப்திய கணவனை வழிபடுபவ ராயின், தேவர்கள் வாழும் உலகின்கண் அவர் களால் பெருஞ் சிறப்பினைப் பெறுவர்.

பெற்றான் பெறின்பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப் புத்தேளிர் வாழும் உலகு.

வாழ்க்கையில் நல்ல மனைவி பெற்றுவிட்டாலே மானம் என்கிற தமிழ்க் கருவூலம் தன்னால் வந்தடையும். மனிதர்களில் பலர் எப்படியும் வாழலாம் என்ற குறிக்கோளையுடையவர்கள். சிலர் தாம் இப்படித்தான் வாழவேண்டும் என்ற குறிக்கோளைப் பொன்னாயுதமாகப் பெற்றிருக் கிறார்கள்.

கவரிமான் ஜாதி வாழ்க்கைதான் கன்னித் தமிழ் வாழ்க்கை. இதைத்தான் நாம் குறளோவியத்தில் சிறப்பான எண்ணமாகக் காணுகின்றோம்.

“மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார்

உயிர்நீப்பர் மானம் வரின்'