பக்கம்:அலை தந்த ஆறுதல்.pdf/96

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சி.பா.

95


செலவழிக்கிறது முக்காப்பணம்னா இந்தக் கதிதான்.

பெண்-5 : பஞ்சுதானேன்னு அளவுக்கு மீறி வண்டியிலே

ஏத்தினா, இரும்பால ஆன அச்சாணியும் முறியத் தானே செய்யும்!

பெண்-4 : நறுக்குன்னு சொன்னாலும் நல்லாச் சொன்

னேடி!

(இருவரும் சிரித்தல்)

ஒரு பையன் (பாடம் படிக்கிறான்)

‘ஆன முதலில் அதிகம் செலவானால்

மானம் அழிந்து மதிகெட்டுப்-போனதிசை எல்லார்க்கும் கள்ளனாய் ஏழ்பிறப்பும் தீயனாய் நல்லார்க்கும் பொல்லனாம் நாடு”

பெண்-5 : கேட்டாயா என் பையன் படிச்சதை பெரிய வங்களானப்புறம் இந்தச் சிக்கனபுத்தி தானா வராதுன்னுதான் நாலாங் கிளாசிலேயே இந்தப் பாட்டைப் படிக்கச் சொல்லிடராங்க.

பெண் : “ஆகா றளவிட்டி தாயினுங் கேடில்லை போகா றகலாக் கடை”

பின் அவரவர்க்குப் பொருள் வருகின்ற நெறியளவு சிறிதாயிருப்பினும் போகின்ற நெறியளவு அதைக் காட்டிலும் அதிகமாகாதாயின் அ த ன ா ல் கேடில்லை.

பின் உண்மையான மகிழ்ச்சி என்பது உள்ளத்தில்

நமக்குள்ளே முதலில் ஏற்படுவதாகும். அதை