பக்கம்:அளவியல் என்னும் தருக்க விளக்கம்.pdf/101

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தருக்கவிளக்கம். க0க மூன்றாவது நிகழும் ஞானத்தான் மெய்யனுபவமன்று என்பது பிர மாணமாதல் கவரப்படுவதுபோல, இவ்வுணர்வு என்பதாய முதலா வது ஞானம் பொய்யாதலும் அஃதாவது பிரமாணமாதலின்மை யுங் கவரப்படுதலானறிக. தன்னாலாதலின்று என்னுங் குற்றம் "அது" என்பதனானீங்கும் என்றது, மேற்போந்தவாற்றான் மெய் யனுபவமன்று என்பது பிரமாணமாதலைக் கவருங்கருவி பிரமாண மாதலின்மையையுங் கவரினுங் கவரப்படும் பிரமாணமாதலின்மை என்றது பிரமாணமாதற்குச் சார்பாயுள்ளதின் வேறாயதொன்று பிரமாணமாதலின்மையை என்பது, 'அவ்வது' என்பதனாற் பெறப் படுதலான். சார்பாயுள்ளது பிரமாணமாதல் என்பது வினைப்பெ யர்கொண்டு முடிந்து நிற்கும் ஓர் எழுவாய்த்தொடர்.அல்ல தூஉம் சார்பாயுள்ளதன் பிரமாணமாதல் எனினும் ஆம்.

  • "குடத்தை யான் காண்கின்றேன் என்பதைப்பின்னிகழு

முணர்வு என்றது குடமாவது இன்னதெனத் தெரிந்த பின்பல்லது குடத்தை யான் காண்கின்றேன் என்னுமுணர்வு நிகழாமையான் என்பது.மேலுமுரைக்கப்பட்டது. 'முயற்சிவடிவாய சம்பந்தம்' என்றது சம்பந்தம் தன்னை யகப்படுத்து நிற்பதாய முயற்சிவாயிலாயல்லது உணரப்படுமாறின் மையான்,முயற்சி, விவசாயம், உணர்ச்சி என்பன ஒரு பொருட் கிளவி என்க.

  • புனலைப்பயில்லாவது தண்ணீரைப் பெற்றுவைத்து அதன்

கண்மூழ்கல், அதனைக்குடித்தல் முதலியன செய்வது, முன்னர்- பயிலுவதன் முன்னர். அனுபவத்தன்மை அனுபவமாதற்றன்மை

  • அதன் சாதியாவது இரண்டாவது நிகழ்வது முதலியவற்றி

னும் முன்னையதாவதினும் ஒப்பநிகழ்வதாய ஓர் பொதுத்தன்மை.