பக்கம்:அளவியல் என்னும் தருக்க விளக்கம்.pdf/103

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தருக்கவிளக்கம். க0௩ அடையடுத்தஞானமே அஃதாவது தோன்றாநின்றது விசே டியமாகவும் வெள்ளித்தன்மை விசேடணமாகவும் உடைய ஞானமே கோடற்பாற்று என்றது மெய்யனுபவத்தின்கண் அடையடுத்த ஞா னமே முயற்சியை நிகழ்த்துவது என்பது எல்லார்க்கும் ஒப்பமுடிந் ததாகலானும், முயற்சியைப் பிறப்பித்தற்கு வெள்ளியினினைவு முன் னர்த்தோன்றா நின்றதன் உணர்வு என்னும் இரண்டனொடு முன் னர்த்தோன்றியதன்கண் வேறுபாடு தோன்றாமையும் கூட்டி மூன் றனைக்காரணமாகக் கோடலினும் அடையடுத்தஞானம் ஒன்றனை யே கோடல் எளிதாகலானும் என்பது. எனவே பொய்யுணர்வு உண்டென்பது இதனாற்போதும் பயன் என்க.

பிரமாணமாதல் தன்னானுணர்தற்பாலது என்பது மீமாஞ்ச கர் மதம். பிறிதானுணர்தற்பாலது என்பது நையாயிகர்மதம். பொய்யுணர்வு இல்லையென்பது குருமதம் என உணர்க. எரு.ஒர்தொடர் மொழிப்பொரு ளுணர்ச்சி யென்னு மொலியா னாய வுணர்ச்சிக் கேது வுரையா முண்மை யுணர்வா மிதுவே. (இ ள்.) வாக்கியப் பொருளுணர்ச்சி சத்தத்தாலாய வுணர்ச்சி; அதற்குக்கரணம் சத்தம். இங்ஙனம் மெய்யனுபவம் தெரித்துரைக் கப்பட்டது.எ று. எசு. பொய்யுணர் வதனைப் புகலிற் றருக்க மையந் திரிவென் றாமூ வகைத்தால். (இ-ள்.) இனிப் பொய்யனுபவம் ஐயம், திரிவு, தருக்கம் என் னும் வேறுபாட்டான் மூவகைத்து. எ - று