பக்கம்:அளவியல் என்னும் தருக்க விளக்கம்.pdf/109

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தருக்கவிளச்சம். மந்நிலை யாக்குவ ததுபாய் முன்னா மண்ணின் கண்ணே மருவு மாற்பிற. க0கூ (இ - ள்.) நிலைபெறுத்துகை வேறுதன்மையாகச் செய்யப்பட் டது மீட்டும் அந்நிலையேயாக்குவது. அது பாய்முதலிய பிருதிவியி னிருக்கும். குணம் கூறப்பட்டது.எ- - நிலைபெறுத்துகை.எ -து.நிலைபெறுத்துகையி னிலக்கணங் கூறுகின்றது. எண்ணல்முதலிய எட்டும், நிமித்தத்தானாகிய நெகி ழ்ச்சியும், வேகமும், நிலைபெறுத்துகையும் பொதுக்குணங்கள். ஏனை உருவமுதலியன விசேடகுணங்கள். திரவியத்தைப் பகுக்கும் உபாதியிரண்டின் ஒருநிலைக்களத்து இராதசாதியுடைமை விசேட குணத்தன்மை. உபாதியிரண்டின் ஒருநிலைக்களம் என்றது ஒன்றற்கல்லது இரண்டற்கு நிலைக்களமாவதோர் குணத்தை என்க. ஒருநிலைக்க ளம் சமானாதிகரணம். பாயிரத்துக்காண்க. திரவியத்தைப் பகுக் கும் உபரதி மண்டன்மை, நீரின்றன்மை என்றற்றொடக்கத்தன. உபாதியிரண்டன் ஒருநிலைக்களம் - இருமை, வேற்றுமை, சையோ கமுதலியன என்றவாறு. கூ. கருமம். கூஉ, சாற்றிற் கருமந் தான் புடைபெயர்ச்சி தீக்கா னீர்மண் சீர்மனத் துறுமால். (இ-ள்.) கருமம் புடைபெயர்ச்சி. கருமமைந்தனுள், எழும்பல் மேலிடத்திற் கூடுதற்கேது. வீழ்தல் கீழிடத்திற் கூடுதற்கேது. வளைதல் உடல்வளைந்து கூடுதற்கேது. நிமிர்தல் நிமிர்ந்து கூடுதற்