உ சிவமயம். ள - ள 1 சே - சிவஞானப் பிள்ளை யவர்கள் இயற்றிய சிறப்புப் பாயிரம் அறுசீர்க் கழிநெடி லாசிரிய விருத்தம். பொன்னாடு மணிநாடு புலவரெலாங் களிதுளும்பிப் புகழ்ந்து பாடும், எந்நாடு மிந்நாட்டுக் கில்லையிணை யென்று மையோ டிறைவ னந்நாள், பன்னாடு பலவிளைத்தெம் பசு போத மறவெறிந்து பறித்தநாடு, சொன்னாடு தமிழ்நாடு சுருதிபுகழ் தென்பாண்டிச் சோதி நாடு. (க) கோபவிநா சப்பெரியோர் கூட்டமொரு பாலெமது குறைவில் வெய்ய, சாபவிநா சப்பெரியோர் குழூஉவொரு பாற் பிறவியெனுந் தவாவெங்கோடைத், தாபவிநா சப்பெ ரியோர் சங்கமொரு பான்மருவத் தாவி னாட்டிற், பாபவிநா சப்பதிச்சார் விக்கிரம சிங்கபுரப் பழம்ப திக்கண். (e) மானந்தக் கூர்விழிவேன் மயிலம்மை யுளமகிழு மகிழ் நர் கோடி, தானந்தக் கோர்மகிழ வியற்றியருந் தவமாற்றித் தனாத கத்தில், தானந்தக் கூறுடைய தகுதியினார் சம்பு வின்றா டலைமேல் வைத்த, ஆனந்தக் கூத்தருக்கு வானந் தந் தரவந்த வரும்பு தல்வர். (1)
பக்கம்:அளவியல் என்னும் தருக்க விளக்கம்.pdf/15
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை