பக்கம்:அளவியல் என்னும் தருக்க விளக்கம்.pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவு தருக்கவிளக்கம்.

  • உருவமுதலியவற்றின்கண் திரவியத்தின் குணமுடைமையாய்

இலக்கணத்திற்கு அதிவியாத்திவரும் என்றது, வழக்குண்மையின், ஒன்றுமுதலிய குணமுடையனபோலத் தோன்றலின், உருவமுத லியன, ஒன்றுமுதலியகுணத்தோடு ஒருங்கு நிற்பதாயும், உண்மைத் தன்மையின் வேறாயும், உள்ளசாதியை யுடையனவாகலான். ஒரு பொருளொடு ஒற்றித்து நிற்றலாவது ஒன்றுமுதலியவும் உருவ முதலியவும் ஒரு திரவியத்தின்கண் ஒன்றுபட்டு நிற்றல் என்பது. ஒற்றித்து, சமவேதித்து, ஒன்றுபட்டு என்பன ஒருபொருட்பன் மொழி. ௩. வடிவஞ் சுவையிரு நாற்ற மூறெண் ணளவு வேற்றுமை புணர்ச்சி பிரிவு முன்மை பின்மை திண்மை நெகிழ்ச்சி சிக்கென லோசை யுணர்ச்சி யின்பந் துன்பம் விருப்பம் வெறுப்பு முயற்சி யறமறம் வாதனையோடு குணமறு நான்கே. (இ - ள்) குணம் உருவம், இரதம், கந்தம், பரிசம், சங்கை, பரி மாணம், வேற்றுமை, சையோகம், விபாகம், பரத்துவம், அபரத்து வம், குருத்துவம்,திரவத்துவம், சிநேகம், சத்தம்,புத்தி,சுகம்,துக் கம், இச்சை, வெறுப்பு,முயற்சி,தர்மம், அதர்மம், வாசனை என இருபத்துநான்கு வகைத்து. (எ - று.) சிக்கெனல் - சிநேகம். குணம்,எ -து,குணங்களைப் பகுக்கின்றது. குணமாவது திர வியம் கருமம் என்னுமிரண்டற்கும் வேறாய்ப் பொதுவியல்புடை யது, குணத்தன்மையாகிய சாதியுடையதெனினுமாம். அற்றேல், எண்மை, மென்மை. வன்மைமுதலியனவும் உண்மையின், குணம்