பக்கம்:அளவியல் என்னும் தருக்க விளக்கம்.pdf/21

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தருக்கவிளக்கம். ககூ இருபத்துநான்கென்றதென்னையெனின்;- அற்றன்று, திண்மை யின் அபாவமே எண்மையாகலானும், அவயவக்கூட்டவிசேடமே மென்மைவன்மைக ளாகலானு மென்க. எழும்பல் விழுதல் வளைத னிமிர்த் னடத்த லுடனே கருமமை வகைத்தே. (இ-ள்.) கருமம் எழும்பல், வீழ்தல், வளைதல், நிமிர்தல், நடத்தல் என ஐவகைத்து. (எ-று) கருமம், எ-து.கருமத்தைப் பகுக்கின்றது. கருமமாவது சை யோகத்தின் வேறாய்ச் சையோகத்திற்கு அசமவாயிகாரணமாயுள் ளது, கருமத்தன்மையாகிய சாதியுடையதெனினுமாம். சுழற்சி முத லியன நடத்தலின் அடங்குமாகலின், ஐந்தென்றல் பொருந்து மாறுணர்க.

  • சையோகத்தின் வேறாய் என்றது, சையோகமும் சையோகத்

திற்கு அசமவாயிகாரணமாகலின், அதன்கண் அதிவியாத்தி வாரா மற்பொருட்டு. அசமவாயி, இதனைக்காரணங்கூறுழிக் காண்க. ரு. பொதுமை மேல்கீ ழெனவிரு வகையே. (இ - ள்.) சாமானியம் பரம், அபரம் என இருவகைத்து. சாமானியம். எ-து. சாமானியத்தைப் பகுக்கின்றது. மிகுதி யினிருப்பது பரசாதி. குறைவினிருப்பது அபரசாதி. சாமானியம் முதலிய நான்கினுஞ் சாதியின்று. சு. மன்னிய பொருளின் கண்ணவா யவற்றின் 4 வேற்றுமை தெரிப்பன பலவாஞ் சிறப்பே.