பக்கம்:அளவியல் என்னும் தருக்க விளக்கம்.pdf/22

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தருக்கவிளக்கம். (இ - ள்.) விசேடம் நித்தியப்பொருள்களினிருப்பன. அவை எண்ணிறந்தனவேயாம். (எ-று.) விசேடம்.எ-து. விசேடத்தைப் பகுக்கின்றது. நித்தியப்பொ ருள்களாவன பிருதிவி முதலிய நான்கின் பரமாணுக்களும், ஆகாய முதலிய ஐந்துமாம். எ. ஒற்றுமை யாப்பஃ தொன்றே யென்க. (இ - ள்.) சமவாயம் ஒன்றுதானே. (எ-று.) சமவாயம்.எ-து. சமவாயத்திற்கு வேறுபாடு இல்லை யென் கின்றது. அ. முன்னின்மை பின்னின்மை முற்று மின்மை யொன்றினொன் றின்மையென் றின்மை நான்கே. (இ-ள்.) அபாவம் முன்னபாவம், அழிவுபாட்டபாவம், முழு துமபாவம், ஒன்றினொன்றபாவம் என நான்குவகைத்து. (எ-று.) அபாவம்.எ-து. அபாவத்தைப் பகுக்கின்றது. க.திரவியம். சு. மண்ணீ ரனல்கான் முறையே நாற்றந் தட்பம் வெப்ப மூற்ற மாகி மெய்ப்பொரு ளழிபொருண் மேவு மென்க. அணுக்கண் மெய்ப்பொருள் காரிய மழிபொருள் பிருதிவிநித்திய வநித்திய வணம் பெறும் நிலையணுப் பொருணிலை யில்லது காரியம் அதுவே: