பக்கம்:அளவியல் என்னும் தருக்க விளக்கம்.pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உவு தருக்கவிளக்கம். புலப்படுகவெனல் வேண்டுதலின், மனமுமன்று பரமாணுவின் பரி சம் இந்திரியத்திற்குப் புலனாகாமையின், ஆதலால் அனுபவிக்கப் படும் பரிசத்திற்குப் பற்றுக்கோடியாது அது வாயுவென்றறிக. அற் றேல், வாயு அனுமிக்கற்பாலதென்றதென்னை? குடம்போலக் கா ட்சிப்பரிசத்திற்குப் பற்றுக்கோடாகலிற் காட்சிப்பொருளேயாமா லோவெனின்;- அற்றன்று, ஆண்டு உற்பூதவுருவமுடைமை உபா தியாகலின், அது திரவியமாய் புறவிந்திரியக் காட்சிப்பொருளா யிருக்கும் இடமெங்கும் உற்பூதவுருவமுண்டெனச் சாத்தியத்தில் வியாபித்தலும், வாயுவாகிய பக்கத்தின்கட் கூறிய எதுவின் வியாபி யாமையும் அறிக. அற்றேல், வெந்நீரின் கண்ணதாகிய தேயுவும் காட்சிப்பொருளன்றாதல் வேண்டுமாலெனின்;- நன்றுசொன் னாய், அதுவே எமது கோட்பாடென்க. இங்ஙனங் கூறியவாற் றால், உருவமின்மையின் வாயுக் காட்சிப்பொருளன் றென்பதறிக. யாண்டடங்கும் என்பது சஞ்சரிக்கும் வாயு பிராணன் எனப் படும் என்பதற்குப் பிராணன் சரீர முதலிய மூன்றனுள் விடயத்தி நடங்கும் என்பது கருத்தெனக் கொள்க என்றவாறு.

  • நியமம் - பிறழ்ச்சியின்மை.

எங்கும் - உளருமிடத்தன்றி யாண்டும். அனுமித்தல் - ஆராய்ந்து துணிதல். காட்சிப்பரிசம் - காட்சியுணர்விற்குப் புலனாகும் பரிசம், காட் சியான் அறியப்படும் பரிசம். காட்சிப்பொருள் என்பதற்கும் இஃ தொக்கும். உபாதி என்பது துணிபொருள் உள்வழி இன்றியமையாது உளதாய் ஏது உள்வழி இலதாவது.