பக்கம்:அளவியல் என்னும் தருக்க விளக்கம்.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தருக்கவிளக்கம். கூகூ தலியனவற்றின் அதிவியாத்தி நீக்குதற்கு மூக்கினாற்கவரப்படுவது' என்றுங்கூறப்பட்டது. உஉ. ஊற்ற மீந்தோ லொன்றாற் கவரப் பட்டுறு குணமது படிநீர் தீக்கா னான்கி னின்று களிரே வெப்ப மிரண்டு மில்ல தெனமூன் றாகு நீரிற் குளிர்ச்சி நெருப்பின் வெப்ப மேனை யிரண்டிற் கிரண்டி லூறே. (இ - ள்) பரிசம் துவக்கிந்திரியத்தான் மாத்திரம் கவரப்படுங் குணம். அது குளிர்ச்சி, சூடு,குளிர்ச்சியுஞ்சூடுமில்லது என்னும் வேறுபாட்டால் மூவகைத்து. பிருதிவி அப்புத் தேயு வாயுக்களில் இருப்பது. அவற்றுள், கீரில் குளிர்ச்சி, தேயுவில்சூடு, பிருதிவி வாயுக் களில் குளிர்ச்சியுஞ் சூடுமில்லாத பரிசம். எ - று. பரியும். எ- து.ஊற்றினிலக்கணங்கூறுகின்றது. பரிசுத்தன் மையின் அதிவியாத்தி நீக்குதற்குக் 'குணம்' என்றும், சையோகமு தலியனவற்றின் அதிவியாத்தி நீக்குதற்கு 'மாத்திரம்' என்றுங் கூறப்பட்டது.

  • ஈண்டுமாத்திரம் என்றதனாற் சையோகமுதலியன விழியா

னுங் கவரப்படுதலின் பரிசத்தின் இலக்கணம் அவற்றிற்கு வாரா தொழிதல் காண்க. ஆகுற்றம் வருமாற்றினையும் நீக்குமாற்றினையும் பிறாண்டும் இவ் வாறே உய்த்துணர்ந்து கொள்க. உ.உ. உருவஞ் சுவையே யூறே நாற்ற நெருப்பானான்கு நிலத்திற் றோன்றி