பக்கம்:அளவியல் என்னும் தருக்க விளக்கம்.pdf/7

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிமையம். திருச்சிற்றம்பலம். போற்காதம். சங்கமிரீஇய வழுதிநாட்டகத்தே, செந்தமிழ் கமழ் வுறூஉம் பொதியமாவரையின் பாங்கருள்ள திருநெல்லையம் பதியிலே, சைவவேளாள குலத்திலே, நல்லொழுக்கத்திற் றலைநின்றோராய் விளங்கிய ஆனந்தக்கூத்தர் என்பார்க்கு, அவர்மனைவியராகிய மயிலம்மையார் திருவயிற்றிலே, தமிழ் நாடுசெய்தவத்தானே சித்தாந்தத்தையுஞ் செந்தமிழையும் அத்தாணிமண்டபத் தரசிருத்துவான் சமயசந்தானாசாரிய ருந் தவத்திற்கதித்த அகத்தியனாரும் பிற்றைஞான்றோருருக் கொளீஇ வந்தாலொப்ப ஒருவர் திருவவதாரஞ்செய்து, முக்களாலிங்கர் என்னும் பிள்ளைத்திருநாமம்பெற்றுச் சகல நற்குணங்களோடும் வளருவாராயினார். அவர், ஐயாட்டை நேர்ந்துழிச் சத்திநிபாதமுடையவராகிப் பிறவிப்பெருந் துன்பக்கடலினின்றுங் கரையேறக் கருத்துற்றுச் சிவதல யாத்திரையைக் காமுற்றுச்சென்றார் திருவாவடுதுறையை யடைந்து ஞானாசிரியராகிய பின் வேலப்பதேசிகசுவாமிகளைத் தரிசித்து, அவர்பாற் சைவசந்நியாசமும், சிவதீக்கையும்,