தருக்கவிளக்கம். ருரு . இன்றி யமையா தீண்டுட னிகழ்ச்சி மறைமாத் திரத்தின் மருவுங் குறியே. மறையுடைத் தென்ன வழங்கப் படுமால். எகூ. (இ-ள்) இனிக் கேவல்வெதிரேகி வெதிரேகத்தின் மாத் திரம் வியாத்தியுடையது: அஃதெங்ஙனம், 'பிருதிவி ஏனையவ வற் றின் வேறு, நாற்றமுடைமையின், யாது ஏனைப்பொருள்களின் வேநன்று அது நாற்றமுடைத்தன்று அப்புப்போல், இஃது அங்ஙன மன்று, ஆதலின் இங்ஙனமன்று' எனவரும். ஈண்டு 'யாது நாற்ற முடைத்து அது எனைப்பொருள்களின் வேறு இதுபோல' என அந்துவயத்தில் திருட்டாந்தம் இல்லை, பிருதிவிமுழுதும் பக்கமே யாகலின். எ - று. கேவல்வெதிரேகியாவது அந்நுவயம் இல்லது எனவே கேவல வெதிரேகியாகிய துணிபொருட்கு இலிங்கம் கேவல்வெதிரேகி என்றதாயிற்று. இனிக் கேவலவெதிரேகி.எ -து. கேவல்வெதிரேகியிலக் கணங் கூறுகின்றது. பிருதிவி.எ-து. அதற்கு உதாரணங்கூறுகின்றது. அற்றேல், எனையவற்றின் வேறாதல் முன்னர்த் துணியப்பட்டதோ அன் றோ? துணியப்பட்டதெனின் யாண்டுத் துணியப்பட்டது ஆண்டு ஏதுவுண்டாயின் அந்நுவயமுடைத்தாதல் கூடும்; ஆண்டு எதுவின் றாயிற் சிறப்பென்னுமநைகாந்திகமாம்; அன்றெனின், துணிபொ ருளுணர்ச்சியின்மையின் அதனான் விசேடிக்கப்படும் அனுமிதி யுணர்வு எங்ஙனந்தோன்றும், விசேடண வுணர்ச்சியின்றி விசேடிக் கப்பட்டதனுணர்வு பிறவாமையின். அன்றியும், எதிர்மறையுண
பக்கம்:அளவியல் என்னும் தருக்க விளக்கம்.pdf/75
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை