வுசு தருக்கவிளக்கம். உவமானப்பிரமாணம். உறுபெயர்க் கோர்பொருட் கியைபை யுணரு மறிவொப் புமையா னாவதொப் புணர்வே. (இ - ள்.) உவமானம் உவமிதியறிவிற்குக் கரணம். உவமிதி பெயர்க்கும் பெயர்ப்பொருட்குமுள்ள சம்பந்தம் அறியுமறிவு. அதற் குக் கரணம் ஒப்புமையறிவு. அஃதெங்கனமெனின், ஆமா என்னுஞ் சொற்குப் பொருளுணராதான் ஒருவன் 'ஆவினையொக்கும் ஆமா என ஓராண்மகன் கூறக் கேட்டுக் காட்டகம் புக்கானாக; அவன் கூறிய தொடர்மொழிப்பொருளைக்கருதி ஆவொப்புமையடுத்த பிண்டத்தைக் கண்ட பின்னர் 'இது ஆமா' என்னும் உவமிதியறிவு தோன்றுமென்க. உவமானம் உரைக்கப்பட்டது.எ 1 உவமானம். எ-து. உவமானத்தினிலக்கணங்கூறுகின்றது. உவமிதி எ-து. உவமிதியிலக்கணங்கூறுகின்றது. சத்தப்பிரமாணம். எ0. உரையென் னளவை யுண்மை கூறு முரியோ னுரைக்க வுறுதொடர் மொழிமற் றாற்ற லுடைய ததுமொழி யாற்ற லிப்பொரு ளுணர்த்துக விச்சொ லாலெ னிறைவன் விருப்ப மென்மனார் புலவர். (இ - ள்.) சத்தப்பிரமாணம் ஆத்தன்வாக்கியம்.ஆத்தன் உரி யோன் என்பன ஒருபொருட்கிளவி. ஆத்தனாவான் உண்மைப் பொருளைக் கூறுவான். வாக்கியம் பதங்களின் கூட்டம்: அது
பக்கம்:அளவியல் என்னும் தருக்க விளக்கம்.pdf/86
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை