பக்கம்:அளவியல் என்னும் தருக்க விளக்கம்.pdf/87

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தருக்கவிளக்கம். வு எ 'ஆவைக்கொணா' என்பன முதலியவாம். பதமாவது ஆற்றலுடைய யது. ஆற்றல் 'இப்பதத்தால் இப்பொருளுணர்த்துக' என்னும் இறைவன் சங்கேதம்,எ - று.

  • சங்கேதம் - இச்சை.

சத்தப்பிரமாணம். எ - து. சத்தப்பிரமாணத்திலக்கணங் கூறு கின்றது. ஆத்தன். எ -து. ஆத்தன் இன்னன் என்கின்றது. வாக்கியம். எ -து. வாக்கியமின்னதென்கின்றது. பதம். எ - து. பதத்தினிலக்கணங்கூறுகின்றது. ஆற்றல்.ஏ -து. பொருணினைவு நிகழ்தற்கு அனுகூலமாய யதங்கடகும் பதார்த்தங்கட்கும் உளதாய சம்பந்தம் ஆற்றலெனவும் அது வேறுபதார்த்தமெனவும் சைமினிமதநூலார் கூறுப, அதனை மறுத்து ஆற்றலின்னதென்கின்றது. ஆதன் பூதன் முதலியவற்றிற் குப்போலக் குடமுதலிய பதங்கட்கும் சங்கேதமே ஆற்றலாகலின், அது வேறுபதார்த்தமென்பது பொருந்தாதென்பதாம்.ஆ முதலிய பதங்களாற் சாதியே முன்னர்க் கருதப்படுதலின் பதங்கட்குச் சாதியின்கண்ணே ஆற்றலெனவும், பொருட்பெறுதி கடா முத லியவற்றால் திகழுமெனவும்,கூறுவாருமுளர். அதுபொருந்தாது, 'ஆவைக்கொணா' என்றற்றொடக்கத்து முதியோர்வழக்கின்கண் யாண்டுங் கொணர்தல் முதலியன பொருளின்கண்ணே நிகழக் காண்டலிற் சாதியடுத்த பொருளின்கண்ணே ஆற்றலென்பதே பொருத்தமுடைத்தாகலின். ஆற்றலுணருமாறு முதியோர்வழக் காற்றுணியப்படும். அங்கனமன்றோ, சொற்பொருளுணர்தல் வேட்கையுடையானோரிளையோன் 'ஆலைக்கொணா ஆவைக்கொணுா என முதி