பக்கம்:அழகர் கோயில்.pdf/109

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

102 5.3.4. உழவர் தெய்வங்கள்: 1.இந்திரன் அழகர்கோயில் தொல்காப்பியம் உழுதொழில் செய்வோரின் தெய்வமாக இந்திரனைக் குறிப்பிடுகிறது. தேவேந்திரன், பள்ளர்களைப் படைத் ததாக ஒரு வழக்குமரபு இருந்ததனைத் தர்ஸ்டன் குறிப்பிடுகிறார்.' இக்காலத்தும் பள்ளர் தங்களைத் 'தேவேந்திரகுல வேளாளர்' என்று கூறிக்கொள்வதாகத் தங்கராஜ் குறிப்பிடுகின்றார். 10 மருதநில உழவர் என்ற காரணத்தினாலேயே இவர் தங்களைத் தேவேந்திர குலம், இந்திர குலம், தேவேந்திரகுல வேளாளர் என உரிமை பாராட்டி வருகின்றனர்' 'என்பது தேவ ஆசீர்வாதத்தின் கருத்தாகும்18 சங்க இலக்கியத்தில் இந்திர வழிபாடு பற்றிப் போதிய செய்திகள் கிடைக்கவில்லை. சிலப்பதிகாரத்தில் 'இந்திர விழவூர் எடுத்த காதை'யில் இந்திரவிழா பற்றிய செய்திகளை அறியமுடிகிறது. ஆயினும் "சிலப்பதிகாரத்தின் இந்திரவிழா, அரசரும் வணிகரும் நடத்திய விழாவேயன்றி மருதநில உழவர்களுக்கு அவ்விழாவில் பங்கு இல்லை*12 என்பது தெளிவு. எனவே சிலம்பின் காலத்திலேயே உழுதொழில் செய்வோர் இந்திர வழிபாட்டினின்றும் நீங்கிவிட்டனர் என்றறியலாம். இந்திர வழிபாடு இன்று தமிழ்நாட்டில் முழுவது மாக மறைந்துவிட்டது. 2. பலராமன் இந்திர வழிபாட்டிலிருந்து நீங்கிய தமிழ்நாட்டு உழவர்கள் வேறெந்தத் தெய்வ வழிபாட்டிற்குத் திரும்பினர் என்பது அடுத்து எழும் கோள்வியாகும். சங்க இலக்கியத்திலும் சிலம்பிலும் திருமா லோடு இணைந்த ஒரு தெய்வமாக-ஆனால் தொல்காப்பியரின் நிலத்தெய்வப் பகுப்பில் இடம்பெறாத - கலப்பையினை ஆயுதமாசு ஏந்திய வாலியோன் என்னும் பலராமனைக் காண்கிறோம். பலராமனுக்கு இணையான உழவர்களின் தெய்வமாகச் சைவ சமயத்தில் (Saivite Counterpart) ஏதும் இல்லை என்பது குறிப்பிடத் தகுந்த செய்தியாகும். எனவே இந்திர வழிபாட்டினை விடுத்த தமிழ்நாட்டு உழவர்கள் தங்கள் தெய்வமாகத் திருமாலோடு இணைந்து நின்ற பலராமனையே வணங்கியிருக்கவேண்டும் என்று கருதலாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழகர்_கோயில்.pdf/109&oldid=1467974" இலிருந்து மீள்விக்கப்பட்டது