பக்கம்:அழகர் கோயில்.pdf/119

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

112 அழகர்கோயில் நீர்நிலைகளில் வலைகட்டி மீன்பிடிக்கும் பழக்கம் வலையர் களின் எல்லாப் பிரிவினருக்குமுண்டு. எனவே தமிழ்நாட்டுக் கோயில்களில் திருவிழாக்களில் தெப்பம் கட்டும் வேலையை இவர் களே செய்துவருவது கண்கூடு. இருபதாண்டுகளுக்கு முன்வரை வன்னிய வலையரின் குடிசை கள் மலைச்சாதி மக்களுடைய குடிசைகளைப்போல வட்டமாக, கூம்பு வடிவக் கூரையோடு அமைந்திருந்தன. இப்போதுகூட, இவர்களின் கோயில் அவ்வடிவிலேயே அமைந்துள்ளது. தாவிக்குப் பதிலாக, காறைக்கயிறு எனப்படும் கயிற்றைக் கழுத்தை ஒட்டிக் கட்டிக்கொள்கின்றனர். கழுத்தில் காறை எழும்பினை ஒட்டி அணியப் பெறுவதால் இக்கயிறு 'காறைக்கயிறு' எனப்பட்டது போலும். "சிங்கப்பிடாரியும் பதினெட்டாம்படிக் கருப்பனும் இவர்களின் தெய்வங்கள் (tribal gods) ஆகும் எனத் தர்ஸ்டன் குறிப்பிடு கிறார். ஆயினும் அரியமலைச்சாமி, வீரணசாமி ஆகிய தெய்வங் கனையும் இவர்கள் வணங்குகின்றனர். மணமுறிவும், விதவை மறுமணமும் இவர்களிடம் வழக்கமாக உள்ளன. சாதித்தலைவர் 'கம்பிளியார்' எனப்படுகிறார். கிராமத் தோறும் தம் சாதிப் பஞ்சாயத்துகளுக்குச் சென்றுவருவதே அவர் வேலையில் பெரும்பகுதியாக அமைகிறது. 5.4.2. வழக்கு மரபுகள் : இச்சாதியினர் அழகர்கோயில் சாமி தங்களுடையதே என்று கூறிக்கொள்கின்றனர். ஒரு வலையன் அழகர்கோயிலுக்குச் சென்ற போது 'முதல் திருநீறு' அவர்க்குக் கொடுக்கவில்லையாம். பிறகு அவர்க்குக் கொடுக்கையில் அர்ச்சகரிடம், "உன்நெத்திலே பூசற் திருநீற என் பொச்சிலே போடு" என்று வீசிவிட்டு வந்துவிட்டதாக ஒரு கதை வழங்குகிறது. பொதுளாக வலையர் உலகியல் அறிவு குறைந்தவர் என்னும் கருத்துப்பட "வந்தாத்தான் தெரியும் வலை யனுக்கு என்னும் சொல்லடை இப்பகுதியில் பிற சாதியாரிடையே வழங்கிவருகிறது.6 தங்களுடைய அழகர் சாமியை மற்றவர்கள் பறித்துக்கொண். டார்கள் என்ற கோபம் இச்சாதியினர்க்கு இருக்கிறது. அழகர்கோயில் சாமியை ஒரு வலையன் தான் கண்டெடுத்தானாம்; அந்தச் சாமியை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழகர்_கோயில்.pdf/119&oldid=1467984" இலிருந்து மீள்விக்கப்பட்டது