பக்கம்:அழகர் கோயில்.pdf/132

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

திருவிழாக்கள் 125 உறியினைத் தொங்கவிட்டு இறைவனை அதன்முன் எழுந்தருளச் செய்வர். உறியில் வெண்ணெய், தேங்காய் முதலியன வைக்கப் பெற்றிருக்கும். பரம்பரை உரிமை உடைய ஒருவர், ஒரு கோலினால் இரண்டு மூன்று முறை அவ்வுறியினை வீழ்த்த முயல்வதுபோல் நடித்துப் பின்னர் அவ்வுறியினை அக்கோலினால் வீழ்த்தி விடுவார். இதனையே 'உறியடித்தல்' என்பர். அழகர்கோயிலில் பரம்பரைக் கொத்தர்கள் உறியடிக்கின்றனர். 6.4.8. நவராத்திரி - விஜயதசமி : பொதுவாக வைணவக் கோயில்களில் கோயிலுக்கு வெளியே இறைவியைத் தனியே எழுந்தருளச் செய்யும் வழக்கமில்லை. அழகர் கோயிலில் இறைவன் விஜயதசமியன்று வெளிக்கோட்டையின் தெற்குவாசலுக்கு எழுந்தருளி அங்குத் திருவிழாவிற்கென நடப் பட்டுள்ள வன்னிமரத்தின்மீது அம்பெய்வார். பின்னர் கொத்தன் அம்மரத்தினை வெட்டி வீழ்த்துவார். முந்திய ஒன்பது நாட்களிலும் இறைவனை வெவ்வேறு வகையாக அலங்கரித்து வைக்கின்றனர். 6.4.9. தீபாவளி : கோயில் ஐப்பசி மாதம் தீபாவளியன்று இறைவனுக்குப் புதிய ஆடைகளைச் சார்த்துவர். வேறு சிறப்புக்கள் இல்லை. 6.4.10. திருக்கார்த்திகைத் திருவிழா : கார்த்திகை மாதம் கார்த்திகை நட்சத்திரத்தில் மலைமீது உள்ள ஒரு பெரிய பாறையில் மிகப்பெரிய கார்த்திகைத் தீபம் ஏற்றுகின்றனர். கோயில் கொத்தர் மலைமீது சென்று இத்தீபத்தை ஏற்றுகின்றனர். திருவிழா' நிகழ்ச்சியாகக் கோயிலில் வேறேதும் கொண்டாடப்பெறுவதில்லை. இத்திருவிழா தமிழ்நாட்டில் எல்லாப் பெருந்தெய்வக் கோயில்களிலும் கொண்டாடப்பெறுவதாகும். 6.4.11. திருவத்யயன உற்சவம் : மார்கழி மாதத்தில் 'வைகுண்ட ஏகர்தசி' எனப்படும் சுக்கில பட்ச ஏகாதசிக்குமுன்னர் திருவாய்மொழி தவிர்ந்த திவ்விய பிரபந்தப் பாசுரங்கள் பகற்பொழுதிலும், வைகுண்ட ஏகரதசி தொடங்கிப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழகர்_கோயில்.pdf/132&oldid=1467997" இலிருந்து மீள்விக்கப்பட்டது