பக்கம்:அழகர் கோயில்.pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1. அழகர்கோயிலின் அமைப்பு 7.1. இருப்பிடம் : வைணவத் தமிழ்நாட்டில் ஆழ்வார்களால் பாடப்பெற்ற திருப்பதிகளில் ஒன்று அழகர்கோயில் ஆகும். நிலக்குறுங்கோட்டில் (latitude) 10.5° பாகையிலும், நிலநெடுங்கோட்டில் (longitude) பாகையிலும் அமைந்துள்ள அழகர்கோயிலி, மதுரை மாவட்டத்தில் மேலூர் வட்டத்தைச் சேர்ந்ததாகும். மதுரையிலிருந்து வடக்கு வடகிழக்குத் திசையில் பன்னிரண்டு கல் தொலைவில் இக் 'கோயில் அமைந்துள்ளது. 78. 14° இப்போது கோயிற் பணியாளர் குடியிருப்புக்களைத் தவிர மக்கள் வசிக்கும் ஊர்ப்பாத்தி எதுவும் இக்கோயிலை ஒட்டி இல்லை. அண்மையிலுள்ள வலையப்பட்டி, கோனாவரையான், ஆயத்தபட்டி ஆகிய மூன்று சிற்றூர்களும் இணைக்கப்பெற்று, 'அழகர்கோயில் ஊராட்சி எனப் பெயரிடப்பட்டுள்ளது. "இரணியமுட்டநாடு என்பது பாண்டி மண்டலத்திலிருந்த உள்நாடுகளுள் ஒன்று என்பதும், அத்தாடு மதுரை மாநகர்க்கு வடகிழக்கேயுள்ள ஆனைமலை, அழகர் கோயில் (திருமாலிருஞ்சோலை) முதலான ஊர்களைத் தன்னகத்தே கொண்ட ஒரு பெருநிலப்பரப்பு என்பதும் கல்வெட்டுக்களால் அறியக் கிடக்கின்றன" என்பர் தி.வை. சதாசிவ பண்டாரத்தார்.2 அழகர் கோயிலிலுள்ள ஒரு கல்வெட்டும், கீழிரணிய முட்டத்துத் திருமா லிருஞ்சோலை' எனக் குறிப்பதால், இந்நிலப்பகுதி அக்காலத்தே. கீழிரணியமுட்டதாடு' என வழங்கப்பட்ட செய்தியையறியலாம். 1.2. கேரட்டைப்பகுதிகள் : இந்நிலப்பகுதியில் தென்கிழக்கிலிருந்து வடகிழக்குத்திசை நோக்கிச் செல்லும் ஒரு மலையும். கிழக்கேயிருந்து வரும் ஒரு மலை யும் சந்திக்கின்ற இடத்தில் தென்திசையில் மலைச்சரிவில் கிழக்குத் நிசையினை நோக்கியதாக அழகர்கோயில் எனப்படும் கோயில் அமைத் துள்ளது (படம் 1). கோயிலுக்கு மேற்கிலும் வடக்கிலும் மலைப் யகுதிகள் உள்ளன. கோயில் இரண்டு கோட்டைகளால் சூழப்பட் டுள்ளது. கோயில் அமைந்துள்ள உட்கோட்டை இரணியன்கோட்டை எனவும், வெளிக்கோட்டை அழகாபுரிக்கோட்டை எனவும் வழங்கப் வெடுகின்றன. நாட்டுப்புறப் பாடல்கள் உட்கோட்டையினை, தள மகாராஜன் கோட்டை' என்று குறிப்பிடுகின்றன5. இரு கோட்டை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழகர்_கோயில்.pdf/14&oldid=1467852" இலிருந்து மீள்விக்கப்பட்டது