பக்கம்:அழகர் கோயில்.pdf/140

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

திருவிழாக்கள் 133 திருந்தாமையாலே மானைக்கொண்டு மானைப் பிடிப்பாரைப் போலே சேதனரைத் திருத்தச் சேதனரான ஆழ்வார்களையும், ஆசார்யர் களையும் அவதரிக்கச் செய்யத் திருவுள்ளம் கொண்டான் ஸ்ரீய பதியான ஸர்வேஸ்வரன்" 15 என்பது வைணவ அறிஞர் கருத்தாகும். இதனால் ஆழ்வார்களும், ஆசாரியர்களும் இறைவனின் தூதுவர்கள் எனத் தமிழ்நாட்டு வைணவர் கருதுவது பெறப்படும். எனவே வைணவ ஆசாரியரான முதல் திருமாலையாண்டான் மஈறந்த ஐப்பசி மாதம் வளர்பிறைப் பன்னிரண்டாம் நாளில் (சுக்கிலபட்சத் துவாதசி) ஆசாரிய மரியாதையின் பொருட்டு இறைவன் மலை மீதுள்ள சிலம்பாற்றிற்குச் சென்று தைலமிட்டு நீராடித் திரும்புகிறார். இந்நிகழ்ச்சியின்போது கலந்துகொள்ளும் மக்களுக்கும் தேய்த்து நீராடத் தைலம் வழங்கப்படுகிறது. இறைவன் தேவியரின்றித் தனித்துச்சென்று நீராடுகிறார். குடத்து நீரில் நீராடாமல், அருவியின் கீழ் உடுத்தவை, அணிந்தவையுடன் நின்று நீராடுகிறார். இன்றும் தமிழ்நாட்டில் பெரும்பாலும் பிராமணரல்லாத சாதியினர் 'இறப்புத் தீட்டு! கழியும் தாளில் தலைக்கு எண்ணெயிட்டு நீராடுவதைக் காணலாம். தமிழ்நாட்டு வைணவத்தில் குருவின் சிறப்பை விளக்கிக் காட்டும் இத்திருவிழா இக்கோயிலுக்கேயுரியது. பிற வைணவக் கோயில்களில் இல்லை. "திருமாலிருஞ்சோலையில் இன்று நூபுரகங்கை என்று அழைக் கப்படும் சிலம்பாற்றின் 'தலையருவிக்கரையிலே அழகர் எழுந்தருளி யிருக்கின்ற காலத்தில் திருமாலிருஞ்சோலை நின்றார் ஆனமாவலி வாணாதிராயர் குமாரர் சுந்தரத்தோளுடையார் மழவராயர் மாதாக் கள் ஸ்ரீரங்கநாயகியார் நாம் கொடுத்த தளம் சாதனப்பட்டயம்’ என்று அவர் வெளியிட்ட ஸ்ரீவில்லிபுத்தூர்க் கல்வெட்டுச் சாதனம் தோடங்குகிறது " என்று வேதாசலம் குறிப்பதிலிருந்து, இத்திருவிழா வாணர்திராயர்கள் காலத்திலும் கொண்டாடப்பட்டதை அறியலாம். 6.5.3. வேடுபறித் திருவிழா: திருமங்கையாழ்வார், மணக்கோலத்தில் வந்த திருமாலை வழிமறித்துக் கொள்ளையிட்ட கதைநிகழ்ச்சி 'வேடுபறி உற்சவம்' என்ற பெயரில் தமிழ்நாட்டில் பெரிய வைணவக் கோயில்களில் கொண்டாடப்படுவது வழக்கம். 'திருமங்கை மன்னன் மடிபிடி' என்ற நூலகத்தில் பெயருள்ள ஓர் ஏடு சென்னை கீழ்திசைச் சுவடி உள்ளது. 12 திருமங்கைமன்னன் திருமாலை வழிமறித்த கதை மரபில் பெரிதும் போற்றப்பட்டு நிகழ்ச்சி தமிழ்நாட்டு வைணவ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழகர்_கோயில்.pdf/140&oldid=1468007" இலிருந்து மீள்விக்கப்பட்டது