பக்கம்:அழகர் கோயில்.pdf/147

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

140 அழகர்கோயில் செய்த சுந்தரத்தோள்களுக்கு வருஷம் ஒருமுறை ஆண்டாள் சாற்றிக்கொண்ட திருமாலையை ஏற்றுக்கொள்ளும் பொருட்டும் ஸ்ரீசுந்தரராஜன் கள்ளர் திருக்கோலத்துடன் மதுரைக்கு எழுந்தருளி வருவதாகக் கோயில் திருவிழா அழைப்பிதழ் அழகரின் பயணத் துக்கான காரணங்களைக் குறிப்பிடுகிறது.6 “சுதபஸ் என்ற முனிவர் நீராடிக்கொண்டிருந்தபோது துர்வாச முனிவர் அவ்விடத்திற்கு வந்தார். அவரைக் கவனிக்காது சுதபஸ் முனிவர் நீராடிப் பூசைகளை முடித்தபின் காலந்தாழ்த்தித் துர்வா சரை வரவேற்க வந்தார். அதனால் சினங்கொண்ட துர்வாசமுனிவர். 'தவளையாக (மண்டூகமாக)க் கடவாய்' எனச் சுதபஸைச் சபித்து விட, சுதபஸ்முனிவர் தவளையானார். பின்னர் சுந்தரராஜப் பெருமாளை நோக்கித் தவமிருந்து அவர் அருட்காட்சி தந்ததனால் முத்தியடைந்தார் கோயில் நலபுராணம் கூறும் மண்டூக முனிவரின் கதைச் சுருக்கம் இதுதான். இந்த மண்டூக முனிவரின் சாபத்தைத் தீர்த்து வீடுபேறு தரவே இறைவன் கோயிலிலிருந்து வண்டியூர் நோக்கி வருவதாகத் திருவிழா அழைப்பிதழ் கூறுகின்றது. ஆண்டாள் சூடிக்கொடுத்த திருமாலையை அழகர் ஏற்றுக் கொள்வது, சித்திரைத் திருவிழாவில் மதுரை தல்லாகுளம் பெருமாள்' கோயிலில் நடைபெறும் ஒரு நிகழ்ச்சியாகும். 7.3. மக்கள் வழக்கிலுள்ள பழமரபுக்கதை : அழகரின் மதுரை வருகை குறித்துத் திருவிழாக் காணவரும் மக்களிடம் பரவலாக வழங்கும் பழமரபுக்கதை (myth) மேற்குறித்த இரண்டு காரணங்களையும் கூறவில்லை; புதியதாக ஒரு செய்தி யினைக் கூறுகிறது. '"அழகர் தன் தங்கை மீனாட்சியின் திருமணத்திற்குச் சீர்வரி சைகளுடன் புறப்பட்டு மதுரைக்கு வருகிறார். அவர் வருவதற்கு முன்னரே அவரில்லாமலே மீனாட்சியின் திருமணம் நடந்து முடிந்து விடுகிறது. வைகையாற்றிலிறங்கிய அழகர் தானில்லாமல் தங்கையின் திருமணம் நடந்துவிட்ட செய்தியினையறிந்து கோபத்துடன் கிழக்கே வண்டியூர் நோக்கித் திரும்பிவிடுகிறார். அங்குத் தன் காதலியான துலுக்கநாய்ச்சியார் வீட்டில் அன்று இரவு தங்கிவிட்டு, மலைக்குத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழகர்_கோயில்.pdf/147&oldid=1468014" இலிருந்து மீள்விக்கப்பட்டது