பக்கம்:அழகர் கோயில்.pdf/15

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 அழகர்கோயில் களும் ஏறத்தாழ 100 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளன. வட பக்கத்திலுள்ள உட்கோட்டையினைவிடத் தென்புறத்திலுள்ள வெளிக் கோட்டை ஏறத்தாழ நான்கு மடங்கு பெரிதாக உள்ளது. இதன் கிழக்குச் சுவரின் ஒரு பகுதி இடிந்த நிலையிலுள்ளது. மதுரையி லிருந்து வடக்குநோக்கி வரும் சாலையும் மேலூரிலிருந்து மேற்கு நோக்கி வரும் சாலையும் வெளிக்கோட்டையின் தெற்கு வாசலில் சந்திக்கின்றன. 'மதில் சூழ் சோலைமலை' என இத்தலத்தினைப் பெரியாழ் வார் பாடுவதால்', அவர் காலத்திலேயே இக்கோயிலைச் சுற்றி ஒரு மதில் இருந்திருக்க வேண்டுமெனத் தெரிகிறது. அழகர்கோயில் வெளிக்கோட்டை பதினான்காம் நூற்றாண்டில் வாணா திராயர்களால் கட்டப்பட்டிருக்கலாம் என இரா. நாகசாமி கருதுவர்'. எனவே பெரியாழ்வார் குறிப்பிடும் 'மதில்' இரணியன்கோட்டை எனப்படும் உட்கோட்டை மதிலாக இருக்கலாம். 1.3. வெளிக்கோட்டைப் பகுc : வெளிக்கோட்டையின் தெற்குவாசல் வழியாகக் கோட்டைக் குள் செல்லவேண்டும். இவ்வாசலிலிருந்து நேர்வடக்காக உட் கோட்டையினை நோக்கி ஒரு சாலை செல்கிறது. சாலையின் இரு பக்கங்களிலும் வெளிக்கோட்டைப் பகுதியில் மரங்களே நிறைத் துள்ளன. இக்கோயிலிலுள்ள கல்வெட்டுக்களால் 'சாமந்த நாராயணச் சதுர்வேதிமங்கலம்' என்னும் பெயருடைய ஓர் அக்கிரகாரம் இங்கு இருந்தது எனவும், பிள்ளைப்பல்லவராயன் என்பான் அதனை அமைத் துக்கொடுத்தான் எனவும் தெரிகின்றது. இப்போது இக்கோயிலின் பிராமணப் பணியாளர் மதுரையில் தல்லாகுளத்தில் குடியிருக்கின் றனர். திருவிழாக்காலங்களில் மட்டும். நாற்பதாண்டுகட்கு முன்னர்க்க கோயில் நிருவாகத்தால் கட்டப்பட்டு, தமக்கு ஒதுக்கப்பட்டுள்ள வீடுகளில் தங்குகின்றனர். இடைக்காலத்தில் ஏற்பட்ட அரசியற் படையெடுப்புக்கள் காரணமாக வெளிக்கோட்டையில் குடியிருந்த பிராமணர்கள் தல்லாகுளம் பகுதிக்குக் குடியேறியிருக்கவேண்டும். வெளிக்கோட்டையின் வடபகுதியில் இப்போது கோயில் அலுவலகப் பணியாளர் குடியிருப்பும், அடியவர் தங்கும் விடுதியும் உள்ளன. சாலையின் மேற்புறத்தில் அலுவலகப் பணியாளர் குடியிருப் பினையடுத்துச் சிதைந்தநிலையில் ஒரு மண்டபம் காணப்படுகிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழகர்_கோயில்.pdf/15&oldid=1467853" இலிருந்து மீள்விக்கப்பட்டது