பக்கம்:அழகர் கோயில்.pdf/154

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

சித்திரைத் திருவிழாவும் பழமரபுக் கதையும் 147 கொள்ள முயல்கிறாள். மீண்டும் தன் பிறந்த வீட்டிற்குத் நன் பெண்ணை மருமகளாக அனுப்பியோ அல்லது உடன்பிறந்தவன் மகளைத் தன் மகனுக்கு மனைவியாக்கியோ தன் பிறந்த வீட்டுச் சொத்தை அனுபவிக்க முயல்கிறாள். எனவே சொத்துரிமையை முன்னிறுத்தி முறைப்பெண், முறை மாப்பிள்ளை என்ற உறவும் தொடங்குகிறது. மாமன்மகள் அந்தைகள், பாமன்மகள் அந்தை மகன் என்ற மணவுறவு முறை (cross cousin mariag:) தென்னிற் தியாவில் பார்ப்பனரல்லாதாரின் வழக்கம் என்று ஹட்டன் கூறுகிறார்.18 தெள்ளிந்தியாவில் பார்ப்பனரல்லாத சாதியாரின் இவ்வழக் கத்தினைத் தமிழ்நாட்டு வைணவமும் தழுவிக்கொண்டது. தமிழ் நாட்டு வைணவக் கோயில்களில் தைப்பொங்கல் கழிந்த மறுநாள், இறைவி (தாயார்) தன் பிறந்த வீட்டிலிருந்து மஞ்சள், குங்குமம் முதலிய பொருட்களைச் சீர்வரிசையாகப் பெறுவதாக ஒரு விழாக் கொண்டாடுகிறார்கள். இதற்காக இறைவியைந் தனியாகக் கோயி லுக்குள் மற்றொரு மண்டபத்திற்கு எழுந்தருளச் செய்கின்றனர். அம்மண்டபம் தாய்வீடாகக் கருதப்படும். இறைவிக்குச் 'நெரான் னங்கள்' (வகைச்போறு) படைக்கப்படும். இவ்விழாவிற்குக் "கணு உற்சவம்' என்பது பெயராகும். தமிழ்,நாட்டு வைலம் பிறந்த சீர்வரிசை பெறும் இவ்வழக்கத்தை ஏற்றுக்கொண்டு, நிலத்து மரபுகளோடு ஒத்துப்போயிருக்கிறது. 14 மேற்குறித்த பழமரபுக்கதை பிறப்பதற்குத் தமிழ்நாட்டு வைணவ மரபுகள் தடையாக இல்லை; மாறாக உதவும் தன்மையிலுள்வன என்பதே இவ்விழாவின்மூலம் நாம் இங்கே நினையந்தகும் செய்தி யாகும். உ வீட்டிலிருந்து ஒரு பெண் 7.8. சீர்வரிசை' நம்பிக்கை : அழகர், மீனாட்சிக்கு அண்ணன் முறையானதால் கொண்டுவருகிறார் என்ற கதைச் செய்தியின் பிறப்புக்குத் திருவிழா நிகழ்ச்சி ஒன்று அடிப்படையாக அமைகிறது. அழகர் ஊர்வவந்தில் உடைகள், நகைகள், பிற அணிகலன்கள் ஆபியவற்றை எடுத்து திருவிழாக் வரும் வண்டிகளும், கூட்டத்திற்கேற்ப அடிபவர் காணிக்கை செலுத்தும் உண்டியல் ஏந்திய சிறிய வண்டிகளும் நிறைய வருகின்றன. இத்த உண்டியல் வரும் காட்சியினை,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழகர்_கோயில்.pdf/154&oldid=1468023" இலிருந்து மீள்விக்கப்பட்டது