பக்கம்:அழகர் கோயில்.pdf/157

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

150 அழகர்கோயில் செல்லவேண்டும். ஆகையால் அழகர் சினங்கொண்டு மதுரைக்குள் நுழையாமல் கிழக்கு நோக்கித் திரும்பிவிடுகிறார் என்ற கதைச் செய்தி இயல்பாகவே அந்நிகழ்ச்சியோடு பொருந்திவிடுகிறது. எனவே இப்படியொரு கதையினைப் படைப்பதில் தாட்டுப்புறமக் கள் சிக்கல்கள் எதனையும் எதிர்கொள்ளவில்லை. 7.10. துலுக்கநாய்ச்சியார்: கதையின் கடைசிப்பகுதி, 'அழகர் வண்டியூர் சென்று தன் காதலி துலுக்கநாய்ச்சியார் வீட்டில் இரவினைக் கழிக்கின்றார். என்பதாகும். முசுலிம்களுக்கும் தமிழ் நாட்டு வைணவத்திற்குமுள்ள தொடர்பு கூர்ந்து நோக்கப்படவேண்டிய ஒன்றாகும். வண்டியூரில் துலுக்க நாய்ச்சியார் கோயில் என்பதே இல்லை. அங்குள்ள சிறிய பெரு மாள் கோயிலில்தான் அழகர் இரவு தங்குகிறார். இருப்பினும் தக வலாளிகள், அப்பெருமாள் கோயிலுக்குச் சற்றுத் தூரத்தில் நின்று அப்பெருமாள் கோயிலையே 'துலுக்கநாய்ச்சியார்' கோயில் என்று அழுத்தமாகக் கூறுகின்றனர். எனவே இது ஆழவேரூன்றிய நம் பிக்கை என்பது தெளிவாகிறது. அழகர் வண்டியூரில் தங்கும் இரவில் முசுலிம்களும் திருவிழா வில் கலந்துகொண்டு பெரிய அளவில் வானவேடிக்கைகள் நடத்தி யதைத் தான் முப்பதாண்டுகட்கு முன்னர் நேரில் கண்டதாக ஒரு தகவலாளி கூறுகிறார்.18 முசுலிம் படையெடுப்புக் காலத்தில் திருவரங்கம் கோயில் கொள்ளையடிக்கப்பட்டு மேலும் பல தொல்லைக்களுக்குள்ளானதை, "டில்லீசுவரனான துலுக்கன் திருவரங்கத் திருப்பதியிலேயும் வந்து புகுந்து கோயிலிலே ப்ரவேஸித்து கருவுகலம் முதலான வைகளையும் கொள்ளையிட்டு, அழகிய மணவானப்பெருமாள் சேரகுல வல்லியார் முதலான விக்ரஹங்களையும் எடுத்துக்கொண்டு, ஸர்வத்தையும் கொண்டு போகையில் ..... என்று கோயிலொழுகு குறிப்பிடுகிறது.19 அதே கோயிலொழுகு திருமால் ஆணையால் 'சாந்து நாய்ச்சியார்' என்ற துலுக்கநாய்ச்சியார் திருவரங்கம் கோயிலில் திரு நிலைப்படுத்தப்பட்டதை, "பெருள் நியமனத்தினாலே ராஜ. மஹேந்திரன் திருவீதியில் வடகீழ் மூலையிலே திருநடைமாளிகை. யிலே அறையாகத் தடுத்து அந்த டில்லீசுவரன் புத்ரியான ஸூர "

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழகர்_கோயில்.pdf/157&oldid=1468026" இலிருந்து மீள்விக்கப்பட்டது