பக்கம்:அழகர் கோயில்.pdf/169

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

162 அழகர்கோயில் அட்சனின் இரண்டாவது முடிவு. இரு தெய்வங்களுக்கு இடையிலான உறவு இந்துசமூக அமைப்பில் ஒரு குலத்தைச் சேர்ந்த மைத்துனன்மார்களுக்கிடையிலான 'முறைப்பான உறவை'க்கொண்டு (tension-ridden relatiouship) உருவகப்படுத்தப்பட்டுள்ளது. இந்துக் குடும்ப அமைப்பில் ஒரு பெண் மனைவி, சகோதரி, தாய் என்ற முறையில் ஒரு குலத்தின் நடுவில் அமைந்திருக்கிறாள். இது தென்னிந்தியக் குடும்ப அமைப்பில் ஓர் அம்சமாகும் என்பதாகும் 13 இப்பழமரபுக் கதையில் இக்கருத்து விளக்கம்பெறுவது உண் மையே. இவ்வியலில் முன்னர்க் காட்டிய நாட்டுப்புறப்பாடல் அட்சன் கூறும் இக்கருத்தினை உறுதி செய்கிறது. எனவே சித்திரைத் திருவிழாவில் வழங்கப்பெறும் பழமரபுக் கதையிலிருந்து கிடைக்கும் செய்திகளை அட்சன் தமது இரண்டு முடிவுகளின் வாயிலாகத் தெரிவிக்கிறார். அவருடைய முடிவுகள் நாம் ஏற்றுக் கொள்ளும் வகையில் அமைந்துள்ளன. குறிப்புகள் 1. ஒரு திதியின் கடைசி ஆறுநாழிகைப் பொழுதினையே வைணவக் கோயில்களில் அத் திதிக்குரிய நாளாகக் கணக்கிடுகின்றனர். 'இறைவனுக்கு ஒரு நாளில் ஆறுநாழிகைபோதும்' என்பது பிராமணப் பணியாளர்களின் நம்பிக்கை. எனவே பௌர்ண மியின் கடைசி ஆறு நாழிகைப் பொழுது அடுத்த நாளுக்குரிய தாக இருந்தால் அந்த அடுத்த நாளையே பௌர்ணமி நாளா கக் கணக்கிடுவர். ஆகையால் மக்கள் பொதுவாகப் பின் பற்றும் நாட்காட்டிக்கும், வைணவக் கோயில்களில் பின்பற்றும் முறைக்கும் ஒருநாள் வேறுபாடு ஏற்பட வாய்ப்புண்டு. 2. சித்திரைத் திருவிழாப் பயண நிகழ்ச்சிகளை விளக்கமாக அறிய, பார்க்க: பிற்சேர்க்கை எண் 111 : 4. 3 Census of India. 1961. Vol. IX Madras : Part VII-B Faris and Festivals, pp. 32-33. 4. தினமலர் நாளிதழ் (நெல்லைப் பதிப்பு). நாள் : 12.5.1979. ப.1. 5. சித்திரைப் பெருந்திருவிழா அழைப்பிதழ், 1977, அருள்மிகு கள்ளழகர் திருக்கோயில் வெளியீடு, 1977.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழகர்_கோயில்.pdf/169&oldid=1468040" இலிருந்து மீள்விக்கப்பட்டது