பக்கம்:அழகர் கோயில்.pdf/176

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

வர்ணிப்புப் பாடல்கள் 169 வரும் கடந்த எண்பதாண்டுகளுக்குள் வாழ்ந்திருக்க வேண்டுமெனத் தெரிகிறது. கருப்பணப்புலவர் அரிசன வகுப்பினர்; வீரணன் கோடாங்கி கோனார் சாதியினர்; பொன்னுசாமி வித்துவான் நாயக்கர் சாதியினர் என மகாசபைத் தலைவர் தெரிவித்தார். இராமசாமிக் கவிராயர் உவச்சர் சாதியினர் என அவரெழுதிய பெரிய அழகர் வர்ணிப்பு நூலில் குறிக்கப்படுகிறார். ஸ்ரீ குழந்தைதாசர் ஸ்ரீவெங்க டேஸ்வரர் எச்சாதியினர் எனத் தெரியவில்லை. 8.5. பக்தர்- வர்ணிப்பாளர் மகாசபை-வரலாறு: ஸ்ரீகள்ளழகர் பக்தர்கள் வாணிப்பாளர் மஹாசபை' என்ற அமைப்பு 1966 ஆம் ஆண்டு மதுரை மதிச்சியம் ஆறுமுகக்கோனா ரால் தொடங்கப்பெற்றுள்ளது. இச்சபையின் வரவு - செலவுப் புத்தகத்தில், 'வர்ணிப்பு உபாத்தியாயர்கள்' என அச்சிடப்பட்ட பகுதியில் இவரும் ஒரு வர்ணிப்பு உபாத்தியாயராகக் குறிக்கப் பட்டுள்ளார். இவர் எழுதிய பாடல்கள் எவையெனத் தெரியவில்லை. பாடுவதில் மட்டும் இவர் வல்லவராகப் பேசப்படுகிறார். இவர் காலமான கி.பி.1978ஆம் ஆண்டு வரை இவரே இச்சபையின் தலைவராக இருந்துள்ளார். 1978 ஆம் ஆண்டு முதல் மதுரை, தத்தநேரி வி.எம். பெரியசாமிக்கோன் தலைவராக இருந்துவருகிறார். பதிவுசெய்யப்படாத இச்சபைக்குச் செயலாளரும் பொருளாளரும் உள்ளனர். சித்திரைத் திருவிழாவில் வைகைக்கரையில் இராமராயர் மண்டபத்திற்கு எதிரில் சபையின் சார்பில் ஒரு திருக்கண் ஆண்டு தோறும் அமைக்கப்படுகிறது. சித்திரைத் திருவிழா நிகழ்ச்சிகள் மதுரையில் முடிந்து அழகர்கோயிலுக்கு இறைவன் திரும்பும்போது இவர்கள் பாடிக்கொண்டே பின்னால் செல்கிறார்கள். மறுநாள் தங்கள் சபையின் செலவில் இறைவனுக்குப் பூசை நடத்தி அன்ன தானம் செய்கிறார்கள். அதற்கடுத்தநாள் நடைபெறும் இறைவன் திருமஞ்சனவிழாவிலும் இவர்கள் கலந்துகொள்கிறார்கள். சபையின் செலவுக்காக, சித்திரைத் திருவிழாவிற்குச் சில நாட்கள் முன்னதாகவே உறுப்பினர்கள் தங்கள் பகுதிகளில் பணமும் அரிசியும் வசூல் செய்கிறார்கள். சபையின் அச்சிட்ட வரவு-செலவுப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழகர்_கோயில்.pdf/176&oldid=1468047" இலிருந்து மீள்விக்கப்பட்டது