பக்கம்:அழகர் கோயில்.pdf/181

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

174 அழகர்கோயில் சில இடங்களில் சங்கரமூர்த்திக்கோனார் பாகவதம் கூறும் கதை நிகழ்ச்சியினைத் தன் கவிதையால் விரித்துக் கூறுகின்றார். கண்ணன் உரோகினி நாளில் பிறக்கிறான். இச்செய்தியினைக் கூறியபின், "பெற்றதாய் தந்தைமுன்னாட் பேர்பெறச்செய் மாதவமோ குற்றமிலாச் சந்த்ர குலமுன்செய் மாதவமோ உத்தமனட்பாக முன்னா ளுத்தவன்செய் மாதவமோ சித்திரப்பொற் றேர்நடத்தத் தேர்விஜயன் செய்த வமோ அன்பின் முலையூட்ட வசோதைசெய்த மாதவமோ நம்பியைய னென்றழைக்க நந்தகோன் செய் தவமோ "18 என வரும் அம்மானைப் பகுதி சங்கரமூர்த்திக்கோனாரின் கவிதை யாகும். செவ்வைச் சூடுவார் பாகவதத்தில் இப்பகுதி இல்லை. இவ்வாறு வருணித்தபின், 'தாமரைக்கர நான்கில் வெண்சங்கொடு' எனத் தொடங்கும் செவ்வைச்சூடுவார் பாகவதப் பாடலை அப்படியே சொல்லிவிட்டு, அதைத் தன் கவிதையில். "சங்கொருகை தண்டொருகை சக்ரா யுதமொருகை அங்கொருகை மீதில் அலர்தா மரைதுலங்க "16 என விளக்குகிறார். மேற்குறித்த ஒப்புமைப் பகுதிகளிலிருந்து, பாகவத அம்மானை பாகவதத்தின் வழி நூல்' என்றோ, 'தழுவல் நூல்' என்றோ குறிப் பிட முடியவில்லை. உவமைகளைக்கூட அப்படியே எடுத்தாளு வதால். இப்பெயர்கள் இதற்குப் பொருந்துவனவாயில்லை. வட மொழியும் தமிழும் கலந்த மணிப்பிரவாள நடையிலமைந்த தம் பிள்ளை ஈட்டினைத் தமிழில் மட்டும் எழுதி அதனை ஈட்டின் தமிழாக்கம்" எனப் பெயரிட்டழைப்பர் ரா. புருஷோத்தமநாயுடு. பாகவத அம்மானை, தமிழிலிருந்தே எளிய தமிழ் நடைக்கு மாற் றப்பட்ட கவிதை நூலாகும். எனவே இதனைப் 'பாகவதத்தின் எளிநடையாக்கம்' எனக் குறிப்பிடலாம். 16

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழகர்_கோயில்.pdf/181&oldid=1468054" இலிருந்து மீள்விக்கப்பட்டது