பக்கம்:அழகர் கோயில்.pdf/188

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

வர்ணிப்புப் பாடல்கள் யாசிரியர். காவியத்தில் வாய்ப்புற்ற இடங்களில் எல்லாம் இவை வருணிக்கப்பட வேண்டும் என்பதே அவர் கருந்தாகும். காளியங் களுக்கு வருணனை இன்றியமையாத ஒரு தேவை என்றும் அவர் கருதியிருக்கிறார். அவ்வாறாயின் ஒரு வருணனைப்பகுதி, கதைப் பகுதியோடு நெருங்கிய தொடர்பின்றி வருணனைக்காகவே தமிழ்க் காப்பியங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளதா என்பதையும் நாம் கண் டறிய வேண்டும். கலவியும் புலவியுமாக மாதவி கோவலனுடன் இனிது வாழ்த் தாள் என்பதைக் கூறவந்த இளங்கோவடிகள். மாதவி பல்வேறு அணிகளையும் அணிந்திருந்த காட்சியை வருணிக்கிறார். 'பரியகம் நூபுரம் பாடகஞ் சதங்கை அரியகம காலுக் கமைவுற அணிந்து குறங்கு செறிதிரள் குறங்கினிற் செறித்து நிறங்கிளர் பூந்துகிர் நீர்மையி னுட்இ தூமணித் தோள்வளை தோளுக் கணிந்து www.** சித்திரச் சூடகம் செம்பொற் கைவளை பரியகம் வால்வளை பவழப் பல்வளை அரியகம் முன்கைக் கமைவுற அணிந்து வாளைப் பகுவாய் வணக்குறு மோதிரம் கேழ்கிளர் செங்கேழ் கிளர்மணி மோதிரம் வாங்குவில் வயிரத்து மரகதத் தாள்செறி காந்தண் மெல்விரல் கரப்ப அணிந்து” என்றெல்லாம் கூறி மேலும் தொடர்ந்து மொத்தம் 32 அணிகளையும் அணிந்த இடங்களையும் விளக்குகிறார். கடலாடு காதையில் வருணனையே இவ்ளருணனை இடம்பெறும் 27 அடிகளுக்கும், பொருளன்றி வேறுபொருள் இல்லை என்பது தெளிவு. எனவே காவியங்கள் எழுந்த காலத்தில் காவியங்களில் ஓர் உறுப்பாகக் கருதுமளவு வருணனை வளர்ந்திருந்தது. அதுவே காவியங்களும் பிற சிற்றிலக்கியங்களும் எழாத நிலையில், நிறைந்த புலவர்களிடையே வர்ணிப்புகளாக இலக்கியப் பயிற்சியில்லாத மலர்ந்தது என்ற முடிவுக்கு நாம் வரவேண்டியுள்ளது. வர்ணிப்புப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழகர்_கோயில்.pdf/188&oldid=1468061" இலிருந்து மீள்விக்கப்பட்டது