பக்கம்:அழகர் கோயில்.pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

12 அழகர்கோயில் இம்மண்டபத்திலுள்ள ஒரு கல்வெட்டால். 'மிழலைக்கூற்றத்து ஈடுளிற் கூறு புள்ளூர்க்குடி முனையதரையனான பொன்பற்றியுடையான்' மொன்னைப்பிரான் விரதமுடித்த பெருமாள்' என்பவன் இம்மண்ட பத்தைக் கட்டி செய்தி தெரிகின்றது 18 இம்மண்டபத்திற்கு, அலங்காரன் திருமண்டபம்' என்ற பெயரும் வழங்கப்படுகிறது. 1.9.கருவறை: மகாமண்டபத்தை அடுத்துள்ள சிறிய அர்த்த (இடைசுழி) மண்டபத்தைத் தாண்டிச்சென்றால் வட்டவடிமான கருவறையை அடையலாம். 'தங்கள்குன்றங்' எனப் பெயர் வழங்கப்படும் இக்கரு வறைக்குள்ளே ஒரு சிறிய வட்டவடிவிலான திருச்சுற்றும் உண்டு. கருவறையில் சீதேவி, பூதேவி ஆகிய இரு தேவியருடன், நின்ற திருக்கோலத்தில் கிழக்கு நோக்கிய வண்ணம் அழகர் சுந்தரராஜர் என்ற பெயர்களால் அழைக்கப்பெறும் இறைவன் காட்சி தருகிறார். இறைவனின் வல மேற்கையில் சக்கரம், இட மேற்கையில் சங்கு, வட் கீழ்க்கையில் கதை, இட கீழ்க்கையில் சார்ங்கவில். இடையில் நாந்தகவாள் ஆகியவை உள்ளன. லை மேற்கையிலுள்ள சக்கரம். பொதுவாக வைணவக்கோவில்களில் மூலத்திருமேனிகளில் கரணப்படு வது போல் அணியாக அமையாமல் பயன்படுத்தும (பிரயோக) நிலையிலுள்ளது குறிப்பிடப்படவேண்டிய செய்தியாகும். 1. 10. முதல் திருச்சுற்று : முனையரையன் திருமண்டபத்திலிருந்து கருவறையைச் சுற்றி வரும் முதல் திருச்சுற்றுக்குள் செல்லவேண்டும். இத்திருச்சுற்றி லிருந்து இக்கோயிலின் வட்டவடிவக் கருவறைமேல் உள்ள வட்ட வடிவ விமானத்தைக் காணலாம். இவ்விமானத்துக்குச் 'சோமசந்த விமானம்' என்பது பெயர். சோமனை (சந்திரனைப் போல வட்ட வடிவிலிருப்பதால் இப்பெயர் ஏற்பட்டதெனக் கொள்ளலாம். 1.11. இரண்டாம் திருச்சுற்று : மீண்டும் கிழக்குநோக்கிப் படியேற்ற மண்டபத்துக்குள் வந் தால் அங்கிருந்து இரண்டாம் திருச்சுற்றுக்குள் செல்லலாம். இவ் விரண்டாம் திருச்சுற்றுக்குத் தென்திசையில் உள்ளது 'கலியாண சுந்தரவல்லித் தாயார்' சன்னிதியாகும். இத்தாயார் சன்னிதியின் பின்புறம் உள்ளது. 'திருவாழி ஆழ்வார்' எனப்படும் சுதர்சனர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழகர்_கோயில்.pdf/19&oldid=1467874" இலிருந்து மீள்விக்கப்பட்டது