பக்கம்:அழகர் கோயில்.pdf/191

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

184 4. தசாவதார வர்ணிப்பு : சாமிக்கண்ணுக்கோனார் அழகர்கோயில் இயற்றிய இவ்வர்ணிப்புப்பாடல் அழகர் வர்ணிப்பைப் போலவே அமைந்துள்ளது. வைகையாற்றில் ராமராயர் திருக்கண்ணில் அழகர் தசாவதாரக் காட்சி தரும் நிகழ்ச் சியை மட்டும் அவதாரவாரியாகக் கதையினைக் கூறி விரிவாகப் பாடுகிறது. பின் நிகழ்ச்சிகளை அழகர் வர்ணிப்பைப் போல், ஆனால் கருக்கமாகப் பாடி முடித்துவிடுகிறது. 5. பெரிய அழகர் வர்ணிப்பு : இராமசாமிக்கவிராயர் இயற்றிய பெரிய அழகர் வர்ணிப்பே கிடைத்துள்ள வர்ணிப்புகளில் அளவிற் பெரியது. இரண்டு பகுதி களாக உள்ள இத்தூலின் முதற்பகுறி' விநாயகர், சுப்பிரமணியர் சரசுவதி, சோமசுந்தரர், மீனாட்சியம்மன், தேவர்கள், சித்தர்கள் திருமால், மாரியம்மன், காளியம்மன், பேச்சியம்மன், செல்லத்தம்மன், சக்கம்மா இருளப்பன், இருளாயி ஆகிய தெய்வங்களை வணங்கி விட்டு, புரட்டாசி மாதம் 'மீனாட்சி அம்மன் கோவில் நவராத்திரி கொலுவின்போது பேயோட்டுகிற வர்ணிப்பு' என்ற தலைப்பில் சில சிறுதெய்வங்களோடு மீனாட்சியம்மனையும் வணங்கி விட்டு முடிந்து விடுகிறது. நூலின் இரண்டாவது பகுதியான அழகர் வர்ணிப்பிற்கும் இதற்கும் தொடர்பு இல்லை. இரண்டாவது பகுதியில் கிருஷ்ணன் பிறப்பு, ஆய்ப்பாடி வருதல், பூதனை முத்திபெற்றது, கிருஷ்ணன் மருதிடைத் தவழ்ந்தது, பசு மேய்த்தது ஆகிய பகுதிகட்குப் பின் அழகர் மலைக் கோயில். சன்னிதி, தீர்த்தம், அழகர்மலையின் பல் வேறு பிரிவுகள் ஆகியவற்றின் சிறப்பினைக்கூறிப் பின்னர் அழகர் வர்ணிப்பினைப் போலத் திருவிழா நிகழ்ச்சிகளைப் பாடி, இராமராயர் மண்டபத்தில் தசாவதாரக் காட்சியில் பத்து அவதாரச் சிறப்பினைச் சற்று விரித்துப்பாடி இறைவன் அழகர்மலைக்குத் திரும்புவதையும் வருணித்து முடிகிறது. கிருஷ்ணாவதாரன் வர்ணிப்பு கூறும் செய்திகள், அழகர் வர்ணிப்பு கூறும் செய்திகள், தசாவதார வர்ணிப்பு கூறும் செய்தி கள், தசாவதார வர்ணிப்பு கூறும் செய்திகள் முதலிய அனைத் தையும் இராமசாமிக்கவிராயர் 'பெரிய அழகர் வர்ணிப்பு' என்ற பெயரில் ஒரு நூலாகப் பாடியுள்ளார். இவற்றோடு தொடர்பில்லாத பிற கடவுளர் துதி நூலின் முதற் பகுதியாகத் தரப்பட்டுள்ளது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழகர்_கோயில்.pdf/191&oldid=1468064" இலிருந்து மீள்விக்கப்பட்டது