பக்கம்:அழகர் கோயில்.pdf/197

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

9. சித்திரைத் திருவிழாவில் நாட்டுப்புறக் கூறுகள் 9.0.அழகர் கோயிலில் நாட்டுப்புற மக்களின் ஈடுபாட்டினை முன் இயல்களில் கண்டோம்.1 நாட்டுப்புற மக்களின் கலை மரபுகள், பண்பாடு ஆகியவை இக்கோயில் சித்திரைத் திருவிழா வில் வெளிப்பட்டுத் தோன்றுவதை இவ்வியலில் காணலாம். 9.1. திருவிழாக்களும் பண்பாடும். ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் கலையுணர்வு, மரபுகள் பண்பாட்டுக் கூறுகள் முதலியவற்றை அச்சமூகத்தைச் சேர்ந்த ஒரு தனிமனிதனிடம் முழுமையாகக் காணவியலாது: தனிமனிதனி டம் இவற்றின் சாயல்களையே ஓரளவு காணமுடியும். கூட்ட உணர்வு (herd instinct) மிகுதீயும் வெளிப்பட்டுத் தோன்றும், குடும்பச் சடன்ருகயிலும், சமூக வீழாக்களிலுமே அக்கூட்டத்தா ரின் கலையுணர்விளையும், மரபுகளையும், பண்பாட்டுக் கூறுகளை யும் அவற்றின் முழுப் பரிமானத்துடன் காணமுடியும். அவற்றி லும் குடும்பங்களில் தடைபெறும் சடங்குகளைவிடச் சமூகம் முழுவதும் பங்குபெறும் திருவிழாக்களில் இவற்றை மிகத்தெளி வாகக் காணலாம். இக்கோயில் சித்திரைத் திருவிழாவின் உச்சக்கட்டமான அழகர் ஆற்றிலிறங்கும் நிகழ்ச்சியைக் காணவரும் மக்களை, இதழ்கள் இலட்சக்கணக்கில்தான் அளவிடுகின்றன.2 1961ஆம் வருடத்தில் சென்சஸ் கணிப்பிதழ் இந்நிகழ்ச்சியைக் காண ஆண்டு தோறும் வரும் மக்களின் எண்ணிக்கை ஐந்து இலட்சத்திற்குக் குறையாது என்கிறது.3 இப்பெரிய திருவிழாவில் கலந்துகொள் ளும் மக்களில் தொண்ணூறு விழுக்காட்டினர் நாட்டுப்புற மக்களே என்பதைத் நிருவிழாவினை நேரில் காண்போர் உணர இயலும் 9.2. நாட்டுப்புற மக்கள் பங்கு : பண்பாட்டாய்வு பற்றிக் குறிப்பிடும் பி. கே. சர்க்கார் இந்துப் பண்பாட்டிற்கு உயர்குடிகளும் பேரவைகளும் (elites and courts) வழங்கியதனைவிட நாட்டுப்புற மக்கள் வழங்கியவை குறைந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழகர்_கோயில்.pdf/197&oldid=1468070" இலிருந்து மீள்விக்கப்பட்டது