பக்கம்:அழகர் கோயில்.pdf/200

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

சித்திரைத் திருவிழாளில் நாட்டுப்புறக் கூறுகள் 193 மார்பில் துளசிமாலை அணிந்துள்ளனர். 3. அனைவரும் தங்கள் வசதிக்கேற்ப மூன்றிலிருந்து முப்பது நாட்கள் வரை புலால் உண் ஏணாது விரதமிருக்கின்றனர். 4. சாதி வேறுபாடின்றி எச்சாதியி னரும் எவ்வேடமும் இடலாம். இவ்வாறு வேடம் பூண்டு வழிபடுவதற்கான காரணத்தை இவர்களால் சொல்லமுடியவில்லை. களஆய்வில் 'இவ்வாறு ஆடை அணிவதற்கு என்ன காரணம்?' என்ற கேள்விக்குப் பெரும்பாலோர் தெரியாது' என்றும், மற்றவர்கள் 'வழக்கம்', 'இதுதான் முறை பரம்பரையா இப்படித்தான் செய்கிறோம்', 'அழகுக்காக', 'அலங் 'காரத்திற்காக' என்றும் லிடையளித்தனர்.6 8.4.1. -வினாப்பட்டிவழித் திரட்டிய செய்திகள்: சித்திரைத் திருவிழாவில் ஆய்லாவர் வீனாப்பட்டி (question naire, மூலம் நிகழ்த்திய ஆய்வின்வழிச் சில செய்திகளைத் தெரிந்து கொள்ள முடிந்தது.* கோலம் பூண்டு வழிபடும் அடியவரில், திரியெடுத்தாடுவோர் முப்பத்திரண்டு விழுக்காட்டினர் (32/); திரியின்றி ஆடுவோர் ஐந்து விழுக்காட்டினர்(5%); துருத்திநீர் தெளிப்பார் அறுபத்து மூன்று விழுக்காட்டினர் (63%); சாட்டையடித்தாடுவோர் ஒரு விழுக் காட்டிற்கும் குறைவானவர்களே. கோனார். அரிசனள் (பள்ளர், பறையர்). சேர்வை. தேவர்) பிள்ளை, குறவர், சக்கிலியர், தாாடு, நாயக்கர்,ஆசாரி, மூப்பனார் (வலையர்). அம்பலம், செட்டியார், வேளார் (குயவர்) ஆகிய சாதி யினர் வேடமிட்டு வழிபடுகின்றனர். 'கோனார், அரிசனர், சேர்வை ஆகிய சாதியினர் முறையே மூப்பத்து நான்கு. இருபது, பதினாறு விழுக்காட்டினராக (34%.20%,16%) அதிக அளவில் பங்கு பெறுகின்றனர். 'பரம்பரையாக வருகிறார்களா அல்லது புதியவரா?' என்ற கேள்விக்கு அறுபத்தைந்து விழுக்காட்டினர் (65%) பரம்பரை யாக இவ்வாறு வேட்கிட்டு வகுனநாகச் தெரிவித்தனர். 'நேர்த்திக் கடாைகவா அல்லது விருப்பத்தின் பேரிலா?' என்ற கேள்விக்குப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழகர்_கோயில்.pdf/200&oldid=1468073" இலிருந்து மீள்விக்கப்பட்டது