பக்கம்:அழகர் கோயில்.pdf/204

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

சித்திரைத் திருவிழாவில் நாட்டுப்புறக் கூறுகள் இத்தளையும் செய்யாது பயலே என்னைமிக மறந்தால் பந்தினி பசுப்போல பயலே வைத்தவதும் நானேதான்© 197 கான்று திரியாட்டக்காரர் கூற, குறிகேட்பவர் 'மெய்தான்' என்கிறார். இனி ஒழுங்காக இருக்கவேண்டுமெனச் கூறி,

  • பெற்றபிள்ளை செய்ததொரு அடே

குற்றமெல்லாம் நான் பொறுப்பேன் அச்சப்படாமலிரு உனக்கு ஆண்குழந்தை நான் தாரேன்”11 என்று திரியாட்டக்காரர் வரம் தருகிறார். அழகர் வர்ணிப்பு நடை முறைகளை அப்படியே வருணிக்கின்றனர். குறி சொல்லி முடிந்த வுடன் ஆட்டம் நின்றுவிடுகிறது. திரியையும் அணைத்துவிடுகின்றனர் 9.4.1.2. திரியீன்றி ஆடுவோர் : திரியாட்டக்காரர் போலவே இவர்களும் வேடமிட்டிருப்பர். லேஞ்சியும், கையில் ஆனால் தலையில் திரியும் கிடையாது. மாறாகக் கையில் 4 அல்லது 5 அடி உயரத்தில் 3 அங்குல கனமுடைய இரு முனைகளிலும் வெள்ளி அல்லது வெண்கலப்பூண் கட்டியிள்ள கருப்புநிறத் தடிக்கம்பினை வைத்துள்ளனர். இது தாங்குலி மரத்தில் செய்த கம்பு என்பர். எனவே இது நாக்குலிக் கம்பு எனப் பெயர் பெறுகிறது. அழகர்கோயிலில் இறைவன் சன்னிதியிலும், பதினெட்டாம் படிச் சன்னிதியிலும் இவர்கள் மருளேறி ஆடுகின்றனர். பிற இடங்களில் ஆடுவதில்லை. ஆடும்போது குறி சொல்வதும் இல்லை. பிற நேரங்களில் திருவிழாக் கூட்டத்தில் ஒவ்வொரு ராசுக் காணப்படுகின்றனர். சில சமயங்களில் திரியெடுத்தாடு வோர்களோடு சேர்த்து வருகின்றனர். கையில் கனத்த நாங்கு லிக்கம்புடன் இவர்களது தோற்றம் ஒரு காவல்காரரைப் போல இருக்கிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழகர்_கோயில்.pdf/204&oldid=1468077" இலிருந்து மீள்விக்கப்பட்டது