பக்கம்:அழகர் கோயில்.pdf/207

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

200 அழகர்கோயில் இராமராயர் மண்டபத்தின் முன் இவர்கள் தண்ணீர் பீய்ச்சும் போது இவர்களுடைய எண்ணிக்கை மிக அதிகமாக இருப்பதால். ஒவ்வொரு ஆண்டும் காவல்துறை பினரின் தலையீடு ஏற்படுகிறது. வேடம்பூண்ட அடியவரில் இவர்கள் மட்டும் சாமியாடுவ தில்லை: குறி செல்லுவதில்லை. திருவிழாக் காட்சியினை வருணக் கும் அழகர் கிள்ளைவிடு தூது. ................... gri துருத்தி மழைபோற் சொரிய... 12 என்று இவர்களைக்குறிப்பிடுகின்றது. வேறு செய்திகளைத் தரவில்லை 9.5. கோலம் பூணாது ஆடுனேசர் : வேடம் பூண்டு வழிபடும் இவர்களைத் தவிரச் சாதாரணமாக வழிபட வருவோரிற் சிலரும் பறினெட்டாம்படிச் சன்னிதியிலும். கோயிலுக்குள் தொண்டைமான் கோபுர வாசலிலும் நிடீரென்று மருளேறி ஆடிவிடுகின்றனர். பெண்களில் நடுத்தரவயது கடந்த வர்களே இவ்வாறு ஆடுகின்றனர். ஆண்களில் இளைஞரும் இவ் வாறு ஆடுகின்றனர். 9.6. வர்ணிப்புப் பாடல் : அழகர் ஊர்வலம் மதுரை வந்துசேர்ந்த இரவு முழுவதும் திருவிழாக் கூட்டத்தில் பலர் வருணிப்புப் பாடல்களைப் பாடுகின் றனர். சிறுசிறு குழுக்களாகச் சாலையோரங்களில் அமர்ந்திருக்கும் மக்களில் ஒருவர் பாடுகிறார். இவ்வாறு பத்திருபது பேர் சூழ அமர்ந்து கேட்க, ஒருவர் பாடிக்கொண்டிருப்பதனைத் தல்லாகுளத் வைகையாற்றுப் பாலம்வரை உள்ள சாலையில் பல இடங்களில் காணலாம், பாடத்தெரித்தவர்கள் மார் வேண்டுமானாலும் பாடலாம்; இன்னார்தான் பாடவேண்டும் என்ற வரைமுறை இல்லை. பெரும்பாலும் பாடப்படுவது 'அழகர் வர்ணிப்பு' என்ற அச் சிடப்பட்ட பாடலே. அழகர் ஊர்வலம் கோயிலிலிருந்து புறப்பட்டு வண்டியூர் சேர்வது வள7 உள்ள காட்சிகளையும் நிகழ்ச்சிகளையும் வருணிக்கும் பாடல் இது.ஆய்ப்பாடிக் கண்ணனின் திருவிளை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழகர்_கோயில்.pdf/207&oldid=1468080" இலிருந்து மீள்விக்கப்பட்டது