பக்கம்:அழகர் கோயில்.pdf/21

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

14 நிறைவுசெய்ய முடியாமல் போய்விட்டனர் அழகர்கோயில் என்பதையறியலாம். இக்கோபுரத்துக்கு 'ராயகோபுரம்' என்பது பெயராகும். 1.14. நீர்நிலைகள் : வெளிக்கோட்டைக்கு மேற்புறத்தில் உள்ள இக்கோயிலுக் சூரிய ஒரு குளம், 'ஆராமத்துக்குளம்' என வழங்கப்படுகிறது.மலை மீதிருந்து வரும் சிலம்பாறு. இக்கோயில் மேற்கு மநிலை ஒட்டி இக்கோயிலுக்சுருகில் ஓடுகிறது. கோயிலுக்குத் தெற்கேயுள்ள ஆராமத்துக்குளத்தில் பாய்ந்து, அதன்பின் சிற்றோடைபோல் மதுரையை நோக்கிச் செல்லும் சாலையை ஒட்டிச் செல்கிறது. பதினெட்டாம்படிச் சன்னிதிக்கெதிரிலிருந்த குளம் இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னர் மூடப்பட்டுவிட்டது. கோயில் வடக்குக் கோட்டைச் சுவரையடுத்து மலைமீது செல்லும் சிறுபாதையினை அடுத்துள்ள குளம் 'நாராயணராயர் தெப்பக்குளம்' என்ற பெயரில் வழங்கப்படுகிறது. ஆராமத்துக்குளத்துக்கு வடக்கேயுள்ள நந்தவனம் 'பெரியாழ் வார் நந்தவனம்' என்றழைக்கப்படுகிறது. இறைவனுக்குத் திரு மாலை கட்டித்தரும் பணியில் பெரியாழ்வார் ஈடுபட்டிருந்ததனால் கோயில் நந்தவனத்துக்கு அவர் பெயர் சூட்டப்பட்டது போலும். கோயிலை ஒட்டியுள்ள பகுதிகள் தவிர, கோயிலுக்குத் தெற்கே ஒரு கல் தொலைவில் பொய்கைக்கரைப்பட்டி என்னும் சிற்றூரிலுள்ள தெப்பக்குளமும் இக்கோவிலுக்கு உரியதாகும். இக்கோயில் இறை வனின் தெப்பத்திருவிழா அங்குதான் நடைபெறும். கோயிலின் வடபுறத்தில் மலைமீது செல்லும் சிறுபாதையில் இரண்டுகல் தொலைவு சென்றால் மலைமீது 'மாதவி மண்டபம்' என்ற பெயருள்ள ஒரு மண்டபம் உள்ளது. ஐப்பசி மாதம் தலையருவித் திருவிழாவில் இக்கோயில் இறைவன் அம்மண்டபத்திற்குச் சென்று மலைமீதிருந்து வரும் சிலம்பாற்றில் நீராடுவார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழகர்_கோயில்.pdf/21&oldid=1467876" இலிருந்து மீள்விக்கப்பட்டது