பக்கம்:அழகர் கோயில்.pdf/213

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

206 9.11. சேவற் சண்டை : அழகர்கோயில் ஒன்பதாம் திருநாளன்று, மதுரை வந்த அழகர் தம் கோயி லைத் திரும்பச் சென்றடைகிறார். வழியிலுள்ள 'அப்பன் திருப்பதி என்ற ஊரில் அன்று சேவற் சண்டை நடக்கிறது. சேவற் சண்டை சட்டரீதியாகத் தடைசெய்யப்பட்டிருப்பினும், அன்று இவ்வூரில் நூற்றுக்கணக்கான சேவற் சண்டைப் போட்டிகள் நடைபெறு கின்றன. அழகர் மலைக்குத் திரும்பி வரும் மகிழ்ச்சியினைக் கொண்டாட மலைப்பக்கத்து ஊர்மக்களால் இது நடத்தப்படுகிறது. என்று சேவற் சண்டையில் ஆர்வமுடைய பெரியவர் ஒருவர் கூறினார்,16 தமிழ்நாட்டில் சேவற் சண்டை இன்று பெரும்பாலும் மறைந்துவிட்டது எனலாம். 9.12. ஐயங்கள் : சித்திரைத் திருவிழா நிகழ்ச்சிகளை நோக்கும்போது, பீராம ணப்பூசனை பெறும் இப்பெருந்தெய்வம் (brahmarical deity) சிறு தெய்வ வழிபாட்டுநெறிகளைத் தயங்காமல் ஏற்றுக்கொண்டது விளங்குகிறது. அழகரை வழிபடுவோர் சிறதெய்வக் கோயில்களில் சாமியாடுவோரின் ஆடைகளை அணிந்து அவர்களைப் போலவே சாமியாடுகின்றனள்: குறி சொல்லுகின்றனர்; இரத்தப்பலி தருகின் றனர். உயர்சாதியினரால் 'தீட்டு' வாயிலாகக் கருதப்பெறும் தோலினாற் செய்த பைகளில் தாங்கள் கொண்டுவரும் நீரை இறை வன்மீது பீய்ச்சி அடிக்கின்றனர்; கோயிலுக்குள்ளேயே சன்னிதிக் கெதிரில் சாமியாடுகின்றனர். வைணவ சமயத் தலைவர்கள் இந் நெறிகளை எவ்வாறு ஒத்துக்கொண்டனர் என்பது விடை காண வேண்டிய கேள்வியாகும். இக்கேள்விக்கு விடை காணுமுன் மந்றொரு ஐயத்தினைத் தீர்த்துக்கொள்ள வேண்டும். வைணவக் கோயில்களில் அழகர் கோயில் மட்டுமே இவ்வாறு தாட்டுப்புற மக்களின் வழிபாட்டு நெறிகளை ஏற்றுக்கொண்டு தனித்தன்மையுடன் விளங்குகிறதா அல்லது வேறு ைைணவக் கோயில்கள் எவையேனும் இதுபோன்ற நாட்டுப்புற வழிபாட்டுநெறிகளை ஏற்றுக்கொண்டுள்ளனவா எனக் காணவேண்டும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழகர்_கோயில்.pdf/213&oldid=1468087" இலிருந்து மீள்விக்கப்பட்டது