பக்கம்:அழகர் கோயில்.pdf/215

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

208 அழகர்கோயில் இக்கோயிலில் தல ஆசாரியராகப் புகழ்பெற்ற வைணவ ஆசாரியரான பராசாபட்டரின் வழியினர் " இருக்கின்றனர். திரி எடுப்போரும், கவாளம் எடுப்போரும் இவரை வணங்கி 'அக்கினி முத்திரை பெற்றுக்கொள்கின்றனர். இத்திருவிழாவில் ஆய்வாளர் சந்தித்த நஞ்சன் எனும் மலைச் சாதியினர் (இருளர்) அக்கினி முத்திரை பெற்றவர்; எப்பொழுதும் புலால் உண்ணாதவர்; நீலகிரி மலைக் காடுகளில் இருளர் அதிகமாக வசிக்கும் குணவக்கரை, கேர்பன் ஆகிய ஊர்களில் ரங்க நாதருக்குக் கோயில்களிருப்பதாகவும் அவர் கூறினார்1? (படம்: 31). தென்னார்க்காடு மாவட்டம் திரு முட்டத்துப் பூவராகப்பெரு மாள் கோயிலில் 'ஒரு முசுலிம் அக்கோயிலுக்கு மானியம் விட்டதற் காசு, முசுலிம்கள் அக்கோயில் இறைவனுக்குத் தேங்காய் உடைத்து வழிபாடுசெய்யக் கோயிலுக்குள் அனுமதிக்கப்படுகின்றனர் திருக்கண்ணபுரம் சௌரிராஜப்பெருமாள்," மாசி" மகத்தன்று. காரைக்காலையடுத்த திருமலைராயன் பட்டினத்திற்குக் கடலாட எழுந்தருளுகிறார். கடற்கரையில் 'ப்ட்டினஞ்சேரி என்ற மீனவக் கிராமம் உள்ளது இம்மீனவர்கள் திருக்கண்ணபுரத்திலிருந்து வரும இறைவனைத் திருமலை ாயன்பட்டினத்து மேற்கு எல்லையிலிருந்து கடற்கரை வரை தெற்கறீர்களால் அலங்கரித்த பவளக். காய்ச் சப்பரம்' எனும் சப்பரத்தில்' தூக்கிச்செல்லும் உரிமை பெற் நிருக்கின்றனர். இப்பெருமானைத் தங்கள் 'வீட்டு மருமகள்' என்று கூறிக்கொள்வதோடு 'தங்கள் ஊரெல்லையை அடைந்ததும் ஊரார சார்பீல் மாலையும், பட்டும் இறைவனுக்குச் சார்த்தி, 'மாப்பிளே. மாப்பிளே' என மகிழ்ச்சியுடன் கூக்குரலீட்டபடி சப்பரத்தைக் குலுக் குகின்றனர் - கடற்கரையில் பாய்மரங்களைக்"கால்களாக'நாட்டி. மீன் வலைகளைக் கூரையாக விரித்து. தாங்கள் அமைத்த பந்தலில் இறைவளை அமரவைக்கின்றனர். அந்தாளிலும் அதற்கு முன்னும் பின்னுமான இருநாட்களிலும் இவர்கள் மீள்பிடிக்கச் செல்வதுமில்லை. மீனோ, புலாலோ உண்பதும் இல்லை.19 இங்குப்" போலவே, சிதம்பரத்தையடுத்த கீள்ளைகிராமத்து மீனவர்கள் மாசி மகத்தன்று அவ்வூலக்குக் கடலாடச் செல்லும்;

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழகர்_கோயில்.pdf/215&oldid=1468089" இலிருந்து மீள்விக்கப்பட்டது