பக்கம்:அழகர் கோயில்.pdf/231

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

224 அழகர்கோயில் ரைப் பற்றியும் இக்கோயிற் பணியாளரிடையே ஒரு கதை வழங்கி வருகிறது 22 முன்னொரு காலத்தில் அழகர்கோயில் வெளிக்கோட்டைப் பகுதிக்குள் கோயிற் பணியாளர் குடியிருந்தனர். கிழக்கு ரதவீதியும், தெற்கு ரதவீதியும் சந்திக்குமிடத்தில் பண்டாரியின் வீடு இருந்தது. பண்டாரியின் வீட்டிலிருந்த வயதான ஓர் அம்மையார், இத்தலத் திறைவனிடம் ஆழ்ந்த பற்றுடையவர். தேரோட்டத் திருநாளின் போது இறைவனுக்குப் படைக்க அந்த முதியவளிடத்தில் ஏதும் இல்லை வறுமை காரணமாக அன்று காத்தொட்டிக்காய் வற்றலும், காணப்பருப்புமே அன்றைக்கு அவ்வீட்டில் உணவாக இருந்தது. அதையும் அவ்வம்மையார் இறைவனுக்குப் படைத்துண்ண இருந்தார்; வறுமையிற்பிறந்த கூச்சம் காரணமாக வீட்டிற்குள்ளேயே இறை வனுக்கு அதனைப் படைத்திருந்தார். தேர் அவ்வீட்டின் முன் வந்ததும் நகராது நின்றுவிட்டது. *"என் அடியாள் உண்ணும் காணப்பருப்பும் காத்தொட்டிக்காய் வற்றலுமே எனக்கு வேண்டும்" எனத் தேர் மீதிருந்த இறைவன் சொன்னார். எல்லோரும் பண்டாரி வீட்டு அம்மையாரின் நிலை மையினை அறிந்து பிள்னர் இறைவன் விரும்பிய அவ்வுணவினை அவ்வீட்டிலிருந்து இறைவனுக்குப் படைத்தனர். பின்னரே தேர் நகர்ந்தது. இக்கதை வழக்கினை உறுதிப்படுத்தும் மற்றொரு செய்தியும் இங்கே நினைக்கத்தருந்தது. ஸ்ரீவில்லிபுத்தூரில் கோயில்கொண்டுள்ள ஆண்டாள் இத் தலத்து இறைவனை மணாளனாக நினைத்துப் பாடியவர். எனவே ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில், அழகர்கோயில் இறைவனின் திருநட்சத்திரமான புரட்டாசி திருவுத்திராட நாளன்று ஆண்டாள் வடக்குநோக்கி எழுந்தருளுவர். அப்போது அகச் உவந்து உண்ட காத்தொட்டிக்காய் வற்றலுர், காணப்பருப்புமே அழகரை உவந்த ஆண்டாளுக்குத் தளிகையாகப் படைக்கப்பெறுகிறது. 23 ஆனால் அழகர்கோயிலில் இஃபோது இவ்வாறு படைக்கப்பெறுவது இல்லை; இவ்வழக்கம் நின்றுபோய் வீட்டது, தென்கலை வைணவத்தின் வலிமையான கூறுகளில் ஒன்று. மக்கள் நம்பிக்கையினைப் புலப்படுத்தும் செய்திகளைச் சடங்காக்கி,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழகர்_கோயில்.pdf/231&oldid=1468106" இலிருந்து மீள்விக்கப்பட்டது