பக்கம்:அழகர் கோயில்.pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

அழகர்கோயிலின் தோற்றம் 3 17 கிறது. இக்குறிப்புக்கள் யாவும் இக்கோயில் பண்டைக்காலத்தில் பௌத்தக் கோயிலாக இருந்ததென்பதைக் காட்டுகின்றது. 2.3.சீனி.வே. ககுத்தின் ஏற்புடைமை: பக்தி வழிப்பட்ட நோக்கில் இக்கருத்து கற்பனையாகத் தோன்றலாம். ஆனால் ஒரு சமயத்தார்க்குரிய கோயில் மற்றொரு சமயத்தாருடைய கோயிலாக மாறுவதோ மாற்றப்படுவதோ சமய இயக்கங்களின் வரலாற்றில் வியப்பான செய்தியாகாது. தஞ்சை மாவட்டத்தில் சிக்கல், வலிவலம், கீழ்வேளூர், தேவூர் ஆகிய ஊர்களிலுள்ள கோயில்கள் ஒரு காலத்தில் பௌத்தக் கோயில்களாக இருந்திருக்கலாம் என்பர் சுரேஷ் பி. பிள்ளை.' புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலையிலுள்ள விசயாலயச் சோழிசுவரம் கோயிற் பரப்பினை (temple complex) பற்றி எழுதும் எஸ்.ஆர். பாலசுப்பிரமணியம், வலப்பக்கத்திலுள்ள சமணக்குடகு என்ற குடபோகக் கோயில் பிற்காலத்தில் வைணவக் கோயிலாக மாறவே, அதன் அர்த்தமண்டபத்தில் திருமாலின் பன்னிரண்டு உருவங்கள மிக்க சிற்பத்திறனுடன் செதுக்கப்பட்டுள்ளன" என்கிறார்5 பஞ்ச ஆராமங்கள் என்று ஒரு சிவதலக்கூட்டம் ஆந்திராவில் உண்டு... இவை சங்காராமங்கள் என்ற பண்டைக்காலத்தில் பௌத்தர்கள் வசித்த இடங்கள் என்று கூறுவர். சங்காராம் என்று விசாகப்பட்டின மாவட்டத்தில் ஒரு ஊரிருப்பதும் இதற்குச் சான்றாகும்" என்கிறார். பி. ஆர். ஸ்ரீநிவாசன். பூரியிலுள்ள செகநாதர் கோயில் காலத்தில் பௌத்தக் கோயிலாக இருந்ததை ரைஸ்டேளீட்ஸ் ஒத்துக்கொள்கிறார் என்று செகதீசன் குறிக்கிறார்'. கேரனத்திலும் இதற்குச் சான்று உண்டு. "மநிலகம் கோயிலும், பிற சமணக் கோயில்களும், சமணமதம் வீழ்ந்து. அம்மதத்தவர் இந்துக்களான போது இந்துக் கோயில்களாக மாற்றப்பட்டன என்று ஸ்ரீதரமேனன் குறிப்பிடுகிறார்.8 எனவே சீனி. வேங்கடசாமியின் கருத்தினை பிகி எளிதாகப் புறந்தள்ளிவிட இயலாது. அவர் தரும் சான்றுகளைக் கூர்ந்து நோக்கவேண்டும். ஒரு ஆய்வாளர்கள் 'தொன்மையல்லாத கூறுகளை உடையது (beterodox) எனக் கருதும் ஒரு கோயில் அல்லது கோயிற் பரப்பு வேறொரு சமயத்திற்கு பௌத்தத்திற்கோ அல்லது சமணத்திற்கோ உரியதாக இருக்க வேண்டும். ஆனால் அதை யாரும் பெரிதாகக் கருதுவதில்லை" என்பர் சுரேஷ் பி, பிள்ளை, சீனி. வே. குறிப்பிடும் தலவிருட்சமும், குளமும் கோமிற் பரப்பின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழகர்_கோயில்.pdf/24&oldid=1467879" இலிருந்து மீள்விக்கப்பட்டது