பக்கம்:அழகர் கோயில்.pdf/241

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

234 அழகர்கோயில் செய்தி ஆய்வுக்குரியது. சிந்தநூல் பார்ப்போன் கொப்பரை கொப் பரையாகத் தனமிருப்பதாகக் கூறக்கேட்டே லாடர்கள் வந்த செய்தி அவர்கள் திருட்டுக் கூட்டத்தார் என்பதை உணர்த்துகிறது. எனவே இறைவனின் அருட்களையினை இறக்கிய செய்தி உட் பொருளுடையதாதல் வேண்டும். இக்கோயிலில் 2}' உயரத்தில் அபரஞ்சி எனும் தங்கத்தாலான திருமால் சிலையொன்று 'ஏறு,திருவு டையாள்' என்ற பெயரோடு இன்றும் உள்ளது. திருடவந்தவர் களின் குறிப்பொருள் இந்தத் தங்கத் திருமேனியாக இருக்கலாம். பிறர் கண்ணுக்குத் தெரியாமல் நடமாடும் வல்லமையுடையவர்கள் கோயிலில் இருந்த கருவூலத்துக்குள் நுழையவில்லை, இறைவனின் திருமேனியையே குறிவைத்தனர். எனவே இந்தக் கதையின் உட் பொருள் இத் தங்கத்திருமேனியைக் கவரமுயன்றதே எனலாம். 11.9. வழிபாடு, கரணிக்கை, திருவிழா : கருப்பசாமிக்கு அடியவர்கள் இரத்தப்பலி கொடுப்பதால், கோயில் அர்ச்சகர்கள் இச்சன்னிதியில் பூசை செய்வதில்லை. குயவர் குலத்தைச் சேர்ந்த பூசாரி ஒருவர் தேங்காய்களை உடைத்து விபூதிப் பிரசாதம் கொடுப்பார் எனக் கோயில் வரலாறு கூறுகின்றது." இருப்பினும் நாள்தோறும் அர்த்தசாமப் பூசைக்குக் கோயிலில் இறைவனுக்குப் படைக்கப்பெறும் தளிகை (உணவு). சாத்தப்பெறும் மாலை முதலியவற்றைக் கோயிற் பணியாளர்களுக்கோ அடியவர் களுக்கோ கொடுக்காமல் 'சேஷப்பிரசாதமாக (உண்டும் அணிந்தும் எஞ்சியவை) இச்சன்னிதியில் பிராமணப் பரிசாரகர் படைக்கின்றனர்

    • பதினெட்டாம்படி ஸ்வாமிக்கு ஆடி உத்ஸவம் 8,9 திருநாள் ஆடி அமாவாசை தவிர.... நித்தியப்படி அர்த்தசாமத்தில் பொருமாள் கண்டருளும் நளிகை திருமாலைகளைக் கொண்டுவந்து சாத்தித் தளிகை கண்டருளப் பண்ணுகிறது24 என்பது திருமலை நம்பிகள் என்ற பணிப்பிரிவினரின் பொறுப்பாகும்.

ஆடி உற்சவம் எட்டு, ஒன்பதாம் திருநாட்களிலும், ஆடி அமாவாசை அன்றும் இச்சன்னிதியின்முன் அடியவர்கள் ஆடுவெட்டிப் பலி கொடுப்பது வழக்கம். எனவே இந்த நாட்களில் மட்டும் பிராமணப் பரிசாரகர் இச்சன்னிதியில் கோயிலிலிருந்து தளிகை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழகர்_கோயில்.pdf/241&oldid=1468115" இலிருந்து மீள்விக்கப்பட்டது