பக்கம்:அழகர் கோயில்.pdf/256

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

முடிவுரை அழகர்கோயிலைப் பற்றி முன் பதினொரு இயல்களில் பேசப் பட்ட செய்திகள் நமக்குச் சில உண்மைகளைத் தெளிவாக்கு கின்றன. அழகர்கோயில் ஊரின் நடுவே அமைந்த ஊரவரால் மட்டும் வழிபடப்பெறும் பெருங்கோயிலாக அமைவதற்கு அதன் இருப்பிடம் துணைசெய்யவில்லை. சுற்றிலும் பெரிய நகரங்கள் அமையாத நிலையில் கிராமப்புரத்து மக்களையே வழிபடுவோராகக் கொண்டு வாழ்வதற்கு ஏற்றமுறையில் அதன் இருப்பிடம் அமைந்துள்ளது. இக்கோயிலின் இருப்பிடமும் கோயிலின் அமைப்பும் முதல் இய லீல் விளக்கப்பட்டன. இரண்டாம் இயலில், 'அழகர்கோயில் பௌத்தக் கோயிலாக இருந்தது' என்று கூறும் மயிலை. சீனி வேங்கடசாமி கூறும் கருத்தின் ஏற்புடைமை ஆராயப்பட்டது. பின்னர் அக்கருத்து முதனிலைச் சான்றுகளாலும், தொல்லெச்சங்களாகக் காணப்பெறும் துணை நிலைச் சான்றுகளாலும் உறுதிசெய்யப்பட்டு ஏற்கப்பட்டுள்ளது. மூன்றாவது இயலில், அழகர்கோயிலின் மீது பரிபாடல் தொடங்கி இருபதாம் நூற்றாண்டில் எழுந்த 'அலங்காரர் மாலை' வரை எழுத்த அச்சிடப்பட்ட இலக்கியங்களும் கீழ்ந்திசைச் சுவடி நூலகத்திலுள்ள அச்சிடப்படாத இலக்கியங்களும் தொகுக்கப்பட்டு ஆராயப்பட்டன. இக்கோயிலைப் பாடும் பரிபாடற் பாட்டும், ஆழ் வார்களின் பாசுரங்களும், சமூகத்துக்கு உண்மையான இலக்கியங் களாக உள்ளன. ஆனால், பிற்காலத்தில் இக்கோயிலின் மீதெழுத்த சிற்றிலக்கியங்கள் அறிந்த செய்திகளையும் சொல்லாது விட்டுவிட் டன; வெறும் வடிவமரபுகளைக் காக்கும் இலக்கியங்களாக அமைந்துவிட்டன. ஆயினும் ஆழ்வார்களின் பரசுரங்களுக்குப் பிற் காலத்தில் எழுந்த உரைகள் ஆழ்வார்களின் பாசுரங்களில் பொதிந்து கிடக்கும் பிற மத எதிர்ப்புணர்ச்சிகளை வெளிப்பட எடுத்து விளக்கியுள்ளன. பிற மத எதிர்ப்புணர்ச்சி சங்க இலக்கியங்களிலே அரும்பிவிட்ட செய்தியும் இவ்வியலில் விளக்கப்பட்டுள்ளது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழகர்_கோயில்.pdf/256&oldid=1468133" இலிருந்து மீள்விக்கப்பட்டது