பக்கம்:அழகர் கோயில்.pdf/261

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

254 அழகர்கோயில் மதுரைக்கு அருகிலுள்ள அழகர்கோயிலே என்ற கருத்து மக்களிடையே நிலவுகிறது. 14ஆம் நூற்றாண்டினரான கந்தபுராண ஆசிரியர் பழமுதிர்சோலை என்பது ஒரு முருகன் தலம் என்பது போலத் தம் நூற்பாயிரத்தில் பாடுகிறார்.8 15ஆம் நூற்றாண்டினரான அருண கிரிநாதரும் இச்சோலைமலையே பழமுதிர்சோலைமலை என்று சுருதிப் பாடியுள்ளார். இவைதவிரப் பழமுதிர்சோலை என்பது அழகர் கோயிலே; அது முருகனின் ஆறுபடை வீடுகளில் ஒன்று என்ற கருத்துக்கு ஆதரவாக வேறு சான்றுகள் எதுவும் இல்லை. பரங்குன்றம், அலைவாய், ஆவிநன்குடி, திருவேரகம் ஆகிய நான்கு மட்டுமே திருமுருகாற்றுப்படை குறிப்பிடும் முருகன் தலங்கள் என்று இராசமாணிக்கனார் கருதுகிறார். குன்றுதோறாடல் என்ற சொல்லுக்கு, மலைதோறும் ஆடல் கொண்டவன்' 'குன்றுதோறாடல்' 'முருகன் என்பது அவர் கொண்ட பொருளாகும். 10 எனுந் தலைப்பில் அமைந்த திருப்புகழ்ப் பாடல்கள் ஐந்தும், 'பல குன்றிலும மர்ந்த பெருமாளே" "பல மலையுடைய பெருமாளே "மலை யாவையும் மேவிய பெருமாளே' 'குன்று தோறாடல்மேவு பெருமாளே என்றே முடிகின்றன.11 இதை நோக்கியபின் இராசமாணிக்கனா ரின் முடிவுக்கு நாமும் வருதல் வேண்டும். ‘குன்றுதோறாடல்' என்னும் பெயரோடு ஒரு முருகன் தலம் இருந்ததாக வாதாட இயலாது. 'பழமுதிர்சோலைமலை கிழவோன்' என்று முருகனைச் சங்க இலக்கியமான திருமுருகாற்றுப்படை பாடுகிறது 12 'பழமுதிர்சோலை என்பது ஒரு முருகன் தலம்; அது அழகர்மலையில் இருந்தது’ என்ற கருத்துடையவர்கள் அதையே சான்றாகக் காட்டுகின்றனர். ஆனால் இராசமாணிக்கனார் பழமுதிர்சோலை எனப்படும் அழகர் மலையில் முருகன் கோயில் இருந்ததில்லை என்று கருதுகிறார். முருகாற்றுப்படை பாடிய நக்கீரரைத் தவிரச் சங்கப் புலவர் வேறு பலரும் மதுரைக்கருகிலுள்ள முருகன் தலமான திருப்பரங் குன்றத்தைப் பாடியுள்ளனர். ஆனால் பழமுதிர்சோலை பற்றிய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழகர்_கோயில்.pdf/261&oldid=1468138" இலிருந்து மீள்விக்கப்பட்டது