பக்கம்:அழகர் கோயில்.pdf/267

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

260 அழகர்கோயில் பெற்றது போலவே இத்திருமேனியும், 'சோலைமலைக்கரசே என். கண்ணபுரத்தமுதே' என்ற பெரியாழ்வார் பாசுரத்தினால் பெயர் பெற்றது. 3, ஆறுமுகப் பெருமான் திருக்கோயில் சுவாமிகளுடன் பன் னிருகை ஆறுமுகத்துடன் பதினெட்டாம்படிக்குத் தென்புரம் மலை யின்மீது தனிச்சந்நிதியாக இருந்ததாகவும், தெற்குக் கோட்டை வாசலுக்கு எதிர்ப்புறம் ராயகோபுரம் உள் வாசலுக்கு எதிரில் இருந்ததாகவும் பழமொழியாகச் சொல்கிறார்கள்' (ப.86). வழக்கு மரபினை (oral tradition) மட்டுமே ஆதாரமாகக் கொள்ள இயலாது. இக்கோயிலில் தொல்லியல் ஆய்வுத்துறையின றால் படியெடுக்கப்பெற்ற 223 கல்வெட்டுக்களிலும் இவ்வாறு ஒரு கோயில் இருந்ததற்கான சிறுகுறிப்புக்கள்கூட இல்லை. 4. மலைமீது சிலம்பாற்றுக்கு அருகிலுள்ள ஒரு மண்டபத்தில் 1960இல் முருகன் கோயில் கட்டப்பட்டது. இம்மண்டபத்தில் முன் ஒருகாலத்தில் முருகன் கோவில் இருந்தது எனவும் கட்டுரையாளர் (1953) குறிப்பிடுகிறார் (.81). முருகன் கோயில் கட்டப்பட்ட இவ்விடம் பழமுதிர்சோலை எனவும் பெயரிடப்பெற்றது. இது தொடர்பாக வைணவ சமயத்தார் தொடர்ந்த வழக்கில் 1967இல் சென்னை உயர்நீதி மன்றம் இவ்வாறு தீர்ப்பளித்தது: "இம்மண்டபம் வழக்கிற்கு முன்னிருந்தவாறு சோலைமலை மண்டபம் அல்லது புளிக்குமிச்சான்மேடு அல்லது சாம்பல்புதூர் மண்டபம் என்றே அழைக்கப்படவேண்டும். பழமுதிர்சோலை முதலிய பிற புதிய பெயர்களால் அழைக்கப்படக்கூடாது."22 மேலும் இம் மண்டபம் அழகர்கோயிலின் சொத்தே என்றும் தீர்ப்பளிக்கப்பட்டது. மலை வழியினையும் வழியிலுள்ள மண்டபங்களையும் நோக்கு வார்க்கு, ஐப்பசி பாதத்தில் அழகர் தொட்டி உற்சவத்துக்காக மலைமீது செல்லும்போலு தங்கி இளைப்பாறும் பல மண்டபங்களில் ஒன்றாகவே இது இருந்திருக்க வேண்டும் என்பது புலப்படும். 5. இக்கோயிலுக்கு ஒரு மைல் கிழக்கே மலையிலுள்ள ஒரு குகையினை 'நக்கீரர் குகை' எனக் குறிப்பிட்டு, ஒரு பூதத்தால் இங்கு அடைக்கப்பட்ட நக்கீரரை முருகன் சிறைமீட்டான் என்பது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழகர்_கோயில்.pdf/267&oldid=1468144" இலிருந்து மீள்விக்கப்பட்டது