பக்கம்:அழகர் கோயில்.pdf/271

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

பிற்சேர்கை I : 2, தமிழ்நாட்டில் வாலியோன் வழிபாடு (பலராமன்) தொல்காப்பியம் காட்டாத சமயநிலைகளையும், தெய்வங் களையும் சங்க இலக்கியாங்கள் நமக்குக் காட்டுகின்றன, தொல் காப்பியம் சில வழிபாட்டு முறைகளை நமக்குக் காட்ட, சங்க இலக்கியங்களில் கடவுட்கொள்கைகள் சமயங்களாகக் கால்கொண்ட நிலைமையைக் காணலாம். அவற்றுள்ளும் கலித்தொகையும் பரி பாடலும் ஏனைய சங்க இலக்கியங்களிலிருந்து பெரிதும் மாறுபட்ட சமய நிலையை அல்லது சமய வளர்ச்சியை நமக்குக் காட்டுகின்றன. அவற்றுள் குறிப்பிடத்தக்கது வாலியோன் என்னும் பலராமன் வழிபாடு ஆகும். தொல்காப்பியர் ‘வாலியோன்' என்ற தெய்வப்பெயரை எங்கும் குறிப்பிடவில்லை. ஆயினும் உயிர்மயங்கியல் நூற்பா ஒன்று (286) *பளைமுன் கொடிவரின்' என்று தொடங்குகிறது. இதைக் குறிப்பீட்டு மு. இராகவையங்கார், "இங்ஙனம் பனைக்கொடியைத் தனியே எடுத்துக்கொண்டு ஆசிரியர் விதி கூறுதலினின்று அக்கொடி அக்காலத்து வழக்குமிகுதி பெற்றிருந்தது என்பது பெறப்படும். இங்ஙனம் பிரபலம் பெற்ற பனைக்கொடி, நம்பி மூத்தபிரானான பலதேவர்க்கன்றி வேறெவர்க்கும் உரியதன்றென்பது கற்றோர் அறிவர்" என்கிறார். இக்கருத்து ஆராய்தற்குரியதே. மாலிருங்குன்றம் என்னும் திருமாலிருஞ்சோலைமலையில் பல ராமன் (வாலியோன்) திருமாலோடு கோயில் கொண்டுள்ளதைப் பரி பாடல்(15) கூறும். பலராமன் வெள்ளை நிறமுடையவன்: கலப்பையை ஆயுதமாக உடையவன்; ஒரு கையில் உலக்கை யினை உடையவன்; பனைக்கொடியினை உடையவன்; பெருங் குடியன்.2 இவன் ஒருமுறை ஒரு மரத்தடியில் சாய்ந்த வண்ணம் நீராடுவதற்காக, யமுனையைத் தன்னிடம் வருமாறு அழைக்கிறான். அவள் வராது போகவே தன் கலப்பை கொண்டு அவளைத் தன்னிருப்பிடத்திற்கிழுத்து நீராடுகிறான். இவனுக்கு 'உறலாயுதன்' என்ற பெயரும் உண்டு. 'உறலம்' என்ற

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழகர்_கோயில்.pdf/271&oldid=1468148" இலிருந்து மீள்விக்கப்பட்டது